பொது செய்தி

தமிழ்நாடு

அணைப்பட்டியில் திரண்ட பக்தர்கள் ; ஹிந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
நிலக்கோட்டை : அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் திரண்டு மகாளய அமாவாசையை முன்னிட்டு திதி கொடுத்து, புனித நீராடி, மோட்ச தீபம் ஏற்றினர்.கொரானா தொற்று பரவாமல் தடுக்க கோயில் மூடப்படுவதாக அறநிலையத் துறை அறிவித்தது. நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இருப்பினும் பக்தர்கள் மகாளய அமாவாசையை முன்னிட்டு

நிலக்கோட்டை : அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் திரண்டு மகாளய அமாவாசையை முன்னிட்டு திதி கொடுத்து, புனித நீராடி, மோட்ச தீபம் ஏற்றினர்.

கொரானா தொற்று பரவாமல் தடுக்க கோயில் மூடப்படுவதாக அறநிலையத் துறை அறிவித்தது. நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இருப்பினும் பக்தர்கள் மகாளய அமாவாசையை முன்னிட்டு வைகையில் நீராடி திதி கொடுத்து மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டனர். இந்நிலையில் ஹிந்து முன்னணியினர் கோயிலை திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நிலக்கோட்டை இன்ஸ்பெக்டர் இந்து முன்னணியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடந்த ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அறநிலையத் துறையினர் கோயில் நடையை மட்டும் திறந்தனர். பக்தர்களை அனுமதிக்கவில்லை. எனவே, வெளியிலிருந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X