சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நன்னடத்தை பிணையத்தை மீறிய ரவுடிகள் கைது

Added : அக் 07, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடாது என்ற நன்னடத்தை பிணையத்தை மீறிய ரவுடிகள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் செயல்பாடுகள் தனிப்படை போலீசார் மூலம் கண்காணிக்கப்படுகிறது.அவர்களில்

திண்டுக்கல் : குற்றச் செயல்களில் ஈடுபடக் கூடாது என்ற நன்னடத்தை பிணையத்தை மீறிய ரவுடிகள் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் செயல்பாடுகள் தனிப்படை போலீசார் மூலம் கண்காணிக்கப்படுகிறது.அவர்களில் பலரை ஆர்.டி.ஓ., முன்னிலையில் ஆஜர்படுத்தி ஓராண்டு காலத்திற்கு குற்றச் செயல்களில் ஈடுபட கூடாது என்பதற்கான உறுதிமொழி கடிதம் பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நன்னடத்தை பிணையத்தை மீறியவர்களை கைது செய்ய எஸ்.பி., ஸ்ரீனிவாசன் உத்தரவிட்டார்.அதன்படி திண்டுக்கல் பொன்மான்துறை புதுப்பட்டி ஸ்ரீரங்கன், தாடிக்கொம்பு சூர்யா, செல்லாண்டியம்மன் கோயில் தெரு அல்லாஆசிக், நரி என்ற நரேந்திரன், முகமது மொய்தீன், ரெட்டியார்சத்திரம் பங்காருபுரம் பொன்னகன், சுல்தான், வேடசந்தூர் பெரியசாமி, காமராஜபுரம் ராஜபாண்டி ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X