பொது செய்தி

தமிழ்நாடு

மாநில கராத்தே போட்டிகளில் கம்பம் மாணவர்கள் சாதனை

Added : அக் 07, 2021
Share
Advertisement
கம்பம் : கொடைக்கானலில் அக்.,2 முதல் 4 வரை நடந்த மாநில அளவிலான கராத்தே, சிலம்பம் போட்டிகளில் கம்பம் மாணவர்கள் சாதித்தனர்.மதுரையை சேர்ந்த நிகான் கோஜூரியயோ கராத்தே அமைப்பு நடந்த போட்டியில் பல மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். வயது, எடை, பெல்ட் பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. 10 வயதுக்குட்பட்ட கட்டாபிரிவில் கம்பம் சக்திவிநாயகர் மெட்ரிக்

கம்பம் : கொடைக்கானலில் அக்.,2 முதல் 4 வரை நடந்த மாநில அளவிலான கராத்தே, சிலம்பம் போட்டிகளில் கம்பம் மாணவர்கள் சாதித்தனர்.

மதுரையை சேர்ந்த நிகான் கோஜூரியயோ கராத்தே அமைப்பு நடந்த போட்டியில் பல மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். வயது, எடை, பெல்ட் பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. 10 வயதுக்குட்பட்ட கட்டாபிரிவில் கம்பம் சக்திவிநாயகர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் இதன்யா முதலிடம், கம்பம் முகைதீன் ஆண்டவர் பள்ளி மாணவி சமிஹா இரண்டாம் இடம் பிடித்தனர். 15 வயதுக்குட்பட்ட பிரிவில் ஜெய்டெக் இன்டர்நேஷனல் பள்ளி மாணவன் தரணிதரன் 3ம் இடம் பிடித்தார்.

சிலம்பத்தில் கம்பம் ராம்ஜெயம்வித்யாமந்திர் மெட்ரிக்பள்ளி மாணவன் ஸ்ரீஜன் 2ம் இடம், ஜெய்டெக் பள்ளி மாணவன் பிரணவ் 3ம் இடம் பிடித்தனர். இவர்கள் டிசம்பரில் உடுமலைப்பேட்டையில் நடக்கும் அகில இந்திய கராத்தே போட்டிகளில் பங்கேற்கிறார்கள். மாணவர்களை பயிற்சியாளர் வைரஹரீஸ், பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X