'பார்' ஆனது பயணியர் நிழற்குடை

Added : அக் 07, 2021
Share
Advertisement
அம்பிளிக்கை : அம்பிளிக்கையில் பயணியர் நிழற்குடை மதுபிரியர்களின் 'பார்' ஆக மாறியதால் காத்திருக்கும் பயணிகள் பரிதவிக்கின்றனர்.ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கையில் இருந்து நவக்கானிக்கு தார் ரோடு பிரிந்து செல்கிறது. இந்த சந்திப்பில் பயணிகள் நிழற்குடை உள்ளது.ஆனால் இரவு நேரங்களில் இந்த நிழற்குடை மதுபிரியர்களின் 'பார்' ஆக மாறிவிடுகிறது. சில நேரங்களில் பகலிலும்

அம்பிளிக்கை : அம்பிளிக்கையில் பயணியர் நிழற்குடை மதுபிரியர்களின் 'பார்' ஆக மாறியதால் காத்திருக்கும் பயணிகள் பரிதவிக்கின்றனர்.

ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கையில் இருந்து நவக்கானிக்கு தார் ரோடு பிரிந்து செல்கிறது. இந்த சந்திப்பில் பயணிகள் நிழற்குடை உள்ளது.ஆனால் இரவு நேரங்களில் இந்த நிழற்குடை மதுபிரியர்களின் 'பார்' ஆக மாறிவிடுகிறது. சில நேரங்களில் பகலிலும் அமர்ந்து மது அருந்தி செல்கின்றனர். பாட்டில் களையும், உணவுப் பொட்டலங்களையும் அப்படியே விட்டுச் செல்வதால் பொதுமக்கள் அங்கு அமர தயங்குகின்றனர்.

அருகிலேயே ஒரு மருத்துவமனை உள்ளது. சுற்று வட்டார பகுதியினர் இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். பஸ்சில் வரும் பயணிகள் இந்த பஸ்ஸ்டாப்பில் அச்சத்துடனேயே நிற்கின்றனர். பயணிகளின் அச்சத்தை போக்க போலீசாரும், உள்ளாட்சி மன்றமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X