பொது செய்தி

தமிழ்நாடு

மயில்கள் பலியாவதை தடுக்க ரயில் வேகத்தை குறையுங்க; வனத்துறை பரிந்துரை

Added : அக் 07, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : தேசிய பறவை மயில்கள் பலியாவதை தடுக்க திண்டுக்கல் வரும் ரயில்களின் வேகத்தை குறைக்க வனத்துறையினர் பரிந்துரைத்துள்ளனர்.திண்டுக்கல், கொடைரோடு, எரியோடு, வடமதுரை, பழநி, ஆயக்குடி, ஒட்டன்சத்திரம் பகுதி மயில்களின் வாழ்விடமாக உள்ளன. திண்டுக்கல் வழியாக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு தினமும் 40க் கும் மேற்பட்ட முறை ரயில்கள் வந்து செல்கின்றன.அவ்வப்போது ரேஷன்

திண்டுக்கல் : தேசிய பறவை மயில்கள் பலியாவதை தடுக்க திண்டுக்கல் வரும் ரயில்களின் வேகத்தை குறைக்க வனத்துறையினர் பரிந்துரைத்துள்ளனர்.

திண்டுக்கல், கொடைரோடு, எரியோடு, வடமதுரை, பழநி, ஆயக்குடி, ஒட்டன்சத்திரம் பகுதி மயில்களின் வாழ்விடமாக உள்ளன. திண்டுக்கல் வழியாக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு தினமும் 40க் கும் மேற்பட்ட முறை ரயில்கள் வந்து செல்கின்றன.அவ்வப்போது ரேஷன் கடைகள், உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்காக வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரயிலில் அரிசி, கோதுமை கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு வரும் உணவு தானியங்கள் தண்டவாளங்களில் சிதறுகின்றன.

அதை உண்பதற்காகவும், தண்டவாளங்களை ஒட்டியுள்ள விளை நிலங்களில் மேய்வதற்காகவும் வரும் மயில்கள் ரயிலில் அடிபட்டு பலியாகின்றன. சமீப காலமாக திண்டுக்கல் கொடைரோடு, தாமரைப்பாடி, எரியோடு பகுதியில் ரயிலில் அடிபட்டு இறக்கும் மயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதை தவிர்க்க திண்டுக்கல் வரும் போது ரயிலின் வேகத்தை குறைக்க வனத்துறையினர் ரயில்வே நிர்வாகத்திற்கு பரிந்துரைத்துள்ளனர். மேலும் மயில்கள் அதிகம் நடமாடும் இடத்தை அடையாளம் காண திட்டமிட்டுள்ளதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X