பொது செய்தி

தமிழ்நாடு

போடி கண்மாய்க்கு பறவைகள் படையெடுப்பு

Added : அக் 07, 2021
Share
Advertisement
போடி : போடி அருகே மீனாட்சியம்மன் கண்மாய்க்கு வந்துள்ள உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகளை சுற்றுலா பயணிகள் ரசிக்கின்றனர்.போடி அருகே மீனாட்சி புரம் மீனாட்சியம்மன் கண்மாய், பங்காருசாமி கண்மாய், சங்கரப்பன் கண்மாய் உள்ளிட்வை உள்ளன. மழைக்காலத்தில் குரங்கணி கொட்டகுடி ஆற்று பகுதியிலிருந்து வெளியேறும் நீர் கண்மாய்களுக்கு வரும்.ஆண்டு தோறும் அக்., முதல் ஏப்., வரை முக்குளப்பான்,

போடி : போடி அருகே மீனாட்சியம்மன் கண்மாய்க்கு வந்துள்ள உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகளை சுற்றுலா பயணிகள் ரசிக்கின்றனர்.

போடி அருகே மீனாட்சி புரம் மீனாட்சியம்மன் கண்மாய், பங்காருசாமி கண்மாய், சங்கரப்பன் கண்மாய் உள்ளிட்வை உள்ளன. மழைக்காலத்தில் குரங்கணி கொட்டகுடி ஆற்று பகுதியிலிருந்து வெளியேறும் நீர் கண்மாய்களுக்கு வரும்.ஆண்டு தோறும் அக்., முதல் ஏப்., வரை முக்குளப்பான், பாம்புதாரா, கூழைக்கிடா, மஞ்சள் மூக்குநாரை, செங்கால் நாரை உள்ளிட்ட இந்திய பறவைகளும், இலங்கை பிளமிங்கோவுடன் ஆஸ்திரேலிய நாட்டு பறவைகள் அதிகமாக வரத்துவங்கியுள்ளன.

கடல்சார்ந்த பகுதிகளில் வசிக்கும் கொக்கு வகைகளும் வந்துள்ளன.இங்குள்ள அடர்ந்த மரங்களில் தங்கி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்ய உள்ளன. கண்மாய் கரையோரம், ஆழமில்லாத நீர் பிடிப்பு பகுதிகளிலும் இப்பறவைகள் கூட்டம் கூட்டமாக இரைதேடுவதை சுற்றுலா பயணிகள் ரசிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X