பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தலில் ஓட்டளிக்க 11 வகை ஆவணம் போதும்

Added : அக் 07, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 வகை ஆவணங்களை காண்பித்து ஓட்டளிக்கலாம்.அக்.9 ம் தேதி 13 பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அதில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை, வங்கி மற்றும் தபால் பாஸ்புக்,

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 வகை ஆவணங்களை காண்பித்து ஓட்டளிக்கலாம்.

அக்.9 ம் தேதி 13 பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அதில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை, வங்கி மற்றும் தபால் பாஸ்புக், ஸ்மார்ட் ரேஷன், ஆதார் கார்டு, ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணி அட்டை, மருத்துவ காப்பீட்டு அட்டை, போட்டோவுடன் ஓய்வூதிய ஆவணம், பார்லி மென்ட், சட்டசபையால் வழங்கப்பட்ட அடையாள அட்டை என 11 வகை ஆவணங்களை காட்டி ஓட்டளிக்கலாம்.

ஓட்டுச்சீட்டு சேதம்

ஓட்டுச்சீட்டு, அதிலுள்ள அலுவல் முத்திரையை அழித்தல் அல்லது சேதப்படுத்துவது, உரிய அனுமதியின்றி ஓட்டுச்சீட்டை ஒரு நபருக்கு வழங்குதல் அல்லது ஒரு நபரிடமிருந்து பெறுதல், கைவசம் வைத்திருப்பது குற்றம். ஓட்டுச்சீட்டை தவிர வேறு எதையும் ஓட்டுப் பெட்டிக்குள் செலுத்த கூடாது. ஓட்டுப்பெட்டி, சீட்டை திறத்தல், சேதப்படுத்துதல் அல்லது அறையில் இடையூறு ஏற்படுத்தினால் குற்றம் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X