தமிழ்நாடு

திண்டுக்கல்லில் மழைநீர் வீணாவதை தடுக்க திட்டம்! மூன்று இடங்களில் தண்ணீர் சேமிக்க ஏற்பாடு

Added : அக் 07, 2021
Share
Advertisement
திண்டுக்கல் : 'ஜல் சக்தி அபியான்' திட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த, குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மூன்று இடங்களில் மழைநீரை சேமிக்க திட்டமிட்டுள்ளனர்.மாநகராட்சியின் 48 வார்டு மக்களுக்கும் தினமும் 1.80 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதற்காக ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கம் மற்றும் காவிரியில் இருந்து தினமும் 50 லட்சம்

திண்டுக்கல் : 'ஜல் சக்தி அபியான்' திட்டத்தில் திண்டுக்கல் மாநகராட்சியில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த, குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மூன்று இடங்களில் மழைநீரை சேமிக்க திட்டமிட்டுள்ளனர்.

மாநகராட்சியின் 48 வார்டு மக்களுக்கும் தினமும் 1.80 கோடி லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. அதற்காக ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கம் மற்றும் காவிரியில் இருந்து தினமும் 50 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்படுகிறது.மழை நீர் வீணாவதை தடுக்க, வீடுகளில் மழைநீர் சேகரிப்பு வசதி ஏற்படுத்த மாநகராட்சியில் முனைப்பு காட்டி வருகின்றனர். நாடு முழுதும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு மற்றும் இயற்கை வளத்தை பாதுகாக்க மத்திய அரசின் 'ஜல் சக்தி அபியான்' திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

இத்திட்டத்தில் மாநகராட்சியில் அதிக மழைப்பொழிவு உள்ள பகுதியில் மழைநீரை சேகரிக்க திட்டமிட்டுள்ளனர். இதன்படி தாடிக்கொம்பு ரோடு லிங்கம்மாள்புரத்தில் நிலப்பரப்பாக மாறிய குளத்தை மீட்டெடுத்து மழைநீரை சேமிக்க முடிவு செய்துள்ளனர். இதேபோல் மலைக்கோட்டை அடிவாரம் அய்யன்குளம், ஒடுக்கம் ரோட்டில் லெப்பை குளத்தையும் துார் வாரி மழைநீரை சேமிக்க திட்டமிட்டுள்ளனர்.

அதிகாரிகள் கூறுகையில், ''ஏற்கனவே 3 இடங்களில் அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்பு குளம் மூலம் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மழைநீர் வீணாவதை தடுக்க, மேலும் கூடுதலாக 3 இடங்களில் மழைநீரை சேமிக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளோம்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X