மனைவி மீது ஆசிட் வீசிய கணவன் 'இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : அக் 09, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்பிரிந்து வாழ சம்மதம் தெரிவிக்காததால் சென்னை புது வண்ணாரப்பேட்டை அருகே மனைவி தமிழரசி மீது ஆசிட் வீசிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர். இளம்பெண் பலாத்காரம் யோகா ஆசிரியர் கைதுசென்னை நங்கநல்லுாரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனு:கடந்த ஜனவரியில் கோடம்பாக்கம்,தமிழக நிகழ்வுகள்பிரிந்து வாழ சம்மதம் தெரிவிக்காததால் சென்னை புது வண்ணாரப்பேட்டை அருகே மனைவி தமிழரசி மீது ஆசிட் வீசிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
இளம்பெண் பலாத்காரம் யோகா ஆசிரியர் கைது
latest tamil news
சென்னை நங்கநல்லுாரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர், மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனு:கடந்த ஜனவரியில் கோடம்பாக்கம், ராஜாம்பாள் தெருவைச் சேர்ந்த யோகராஜ், 45, என்ற யோகா ஆசிரியர், எனக்கு அறிமுகமானார்.
அவரிடம், யோகா கற்றுக் கொள்ள, பிப்., 14ம் தேதி வகுப்பில் சேர்ந்தேன். இந்நிலையில் ஏப்., 28ம் தேதி, தனக்கு பிறந்த நாள் எனக்கூறி, அவரது வீட்டுக்கு அழைத்த யோகராஜ், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து தந்து, என்னை பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோவாக பதிவு செய்தார்.அதை வைத்து, மிரட்டி பலமுறை என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்; மேலும், பணமும் பறித்தார். தற்போது திருமணம் செய்ய கட்டாயப்படுத்துகிறார். மறுத்தால், வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி வருகிறார். எனவே, யோகராஜ் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இதையடுத்து, யோகராஜ் மீது பாலியல் பலாத்காரம் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்த போலீசார், அவரை நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.


போலி ஆவணம்: மோசடி பேர்வழிக்கு '9 ஆண்டு' சிறை


சென்னை : போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டவருக்கு, சிறப்பு நீதிமன்றம் 9 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உள்ளது.மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் சுனில்குமார் தபாடியா.
இவர், சென்னை திருவொற்றியூரில் வசித்து வருகிறார்.இதற்கிடையே, திருவொற்றியூரில் அவருக்கு சொந்தமான நிலத்தை, அதே பகுதியைச் சேர்ந்த நத்மல் ஜெயின், அவரது கூட்டாளிகளான மனோகரன், உலகநாதன் ஆகியோர், போலியான பட்டா தயாரித்து விற்பனை செய்து உள்ளனர். இது குறித்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதைத்தொடர்ந்து, குற்றவாளிகள் மீதான குற்றப்பத்திரிகையை, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.அதைத்தொடர்ந்து, குற்றத்தில் மூளையாக செயல்பட்ட நத்மல்ஜெயின் என்பவருக்கு, 9 ஆண்டுகள் சிறை மற்றும் 9,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.


மொபைல் போன் கொள்ளை கும்பல் பிரியாணி கடை தகராறில் சிக்கியது


அம்பத்துார் : பிரபல மொபைல் போன் விற்பனையகத்தில் கொள்ளையடித்த கும்பல், பிரியாணி கடையில் 'மாமூல்' கேட்டு தகராறில் ஈடுபட்டபோது சிக்கியது.
அம்பத்துார், கிருஷ்ணாபுரம், சி.டி.எச்., சாலையில், பிரபல மொபைல் போன் விற்பனையகம் உள்ளது. கடந்த, 3ம் தேதி இரவு, அந்த கடையின் பூட்டை உடைத்த மர்ம கும்பல், அங்கிருந்து, 3.30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 16 புதிய மொபைல் போன்களை திருடி சென்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, அம்பத்துார் அடுத்த ஐ.சி.எப்., காலனியில் உள்ள பிரியாணி கடையில், சிலர், மாமூல் கேட்டு தகராறு செய்வதாக, தனிப்படை போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, தகராறில் ஈடுபட்ட ஐந்து பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், அம்பத்துார் அத்திப்பட்டு அருகே உள்ள, குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த மனோஜ், 20, பிரேம், 20, அப்துல்லா, 22, குமார், 19, மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரிய வந்தது. இவர்கள் பிரியாணி கடை, மளிகை கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டி வந்துள்ளனர்.
மேலும், அம்பத்துாரில் உள்ள பிரபல மொபைல் போன் விற்பனையகத்தின் ஷட்டர் பூட்டை 'லாவகமாக' உடைத்து, உள்ளே நுழைந்து, 16 மொபைல் போன்கள் திருடியதும் தெரியவந்தது.அவர்களை, நேற்று கைது செய்த போலீசார், 21 மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச் உட்பட, 40 எலக்ட்ரானிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.


latest tamil newsலாரியில் ஆயில் திருடியவர்கள் கைது


ஆர்.கே., நகர்-மாதவரம் அடுத்த மஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர், சொந்தமாக டேங்கர் லாரி வைத்துள்ளார். அவ்வப்போது, இவர் லாரியில் இருந்து, ஆயில் திருடு போயுள்ளது.இது குறித்து, ஆர்.கே., நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், அவரிடம் வேலை பார்க்கும் குணசேகர், 60, ஆட்டோ ஓட்டுனரான ராஜி, 48, ஆகியோர், ஆயில் திருட்டில் ஈடுபட்டதும், அளவு கோலை போலியாக தயாரித்து, அளவில் மோசடி செய்ததும் தெரியவந்தது.போலீசார் இருவரையும் கைது செய்தனர். விசாரணையில், புருஷோத்தமனிடம் ஏற்கனவே வேலை பார்த்த கலாநிதி என்பவர், ஆயில் திருடியது தொடர்பாக வேலையில் இருந்து நிறுத்தப்பட்டார்.உரிமையாளரை பழிவாங்கவே, தற்போது பணியாற்றும் குணசேகர் மற்றும் ராஜியை வைத்து, ஆயில் திருட்டில் ஈடுபட்டது அம்பலமானது. தலைமறைவாக உள்ள கலாநிதியை போலீசார் தேடி வருகின்றனர்.


கத்தியைக் காட்டி பணம் பறித்தவர் கைது திண்டிவனத்தில் துரத்திப்பிடித்த போலீஸ்


திண்டிவனம் : திண்டிவனம் அருகே காரில் சென்றவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கைது செய்தனர்.
சென்னை, ஷெனாய் நகரைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன், 40; ஆர்க்கிடெக். இவர் நேற்று திண்டிவனம் வழியாக சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் அருகே, பின் தொடர்ந்து ஸ்பிளண்டர் பைக்கில் வந்த இருவர் காரை உரசியது போல் வந்து நிறுத்தினர். அதிர்ச்சியடைந்த பாலசுப்ரமணியன் காரை நிறுத்தி, கதவை திறந்துள்ளார். அப்போது அந்த நபர்கள், திடீரென அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணம் கேட்டுள்ளனர். அவர் பர்சை எடுத்து 200 ரூபாய் கொடுத்துள்ளார். அப்போது பர்சை பறிக்க முயன்றனர்.
அதற்குள் காரின் அருகே வந்த ஒரு வாலிபர் தனது பைக்கை நிறுத்தியதும், இருவரும் தப்பிச்சென்றனர்.அவ்வழியாக வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசாரிடம் பாலசுப்ரமணியன் புகார் தெரிவித்தார். பைக்கில் தப்பிச் சென்ற நபர்களை போலீசார் துரத்திச்சென்று, ஓங்கூர் அருகே பொது மக்கள் உதவியுடன் பிடித்தனர்.


இந்திய நிகழ்வுகள்மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை


தட்சிண கன்னடா : ஊழியர்கள் மீதான கோபத்தில், தந்தை துப்பாக்கியால் சுட்டதில், மகன் படுகாயம் அடைந்தார்.தட்சிண கன்னடா, மங்களூரு நகரில் உள்ள மோர்கன் கேட்டில் தனியார் சரக்கு ஏற்றும் நிறுவனத்தை நடத்தி வருபவர் ராஜேஷ் பிரபு, 45. இவரது நிறுவனத்தில் வேலை செய்யும் சந்துரு மற்றும் அஷ்ரப் ஆகிய இரண்டு ஊழியர்களுக்கும், உரிமையாளர் ராஜேஷ் பிரபுவுக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு சம்பளம் தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
அப்போது ராஜேஷ் பிரபுவின் மகன் சுதீந்திரா, 17, ஊழியர்களுடன் சண்டை போட்டார். இதனால் ஊழியர்கள் வெளியே சென்று விட்டனர். அதன் பிறகும் ஊழியர்களுடன் சுதீந்திரா சண்டை போட்டதில் இரு தரப்பினரும் மோதி கொண்டனர். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த ராஜேஷ் பிரபு, உரிமம் பெற்ற தன் கைத்துப்பாக்கியுடன் வெளியே வந்து அவர்களை கலைக்கும் நோக்கில் சுட்டார்.இவ்வாறு இரண்டு முறை சுட்டதில், ஒரு குண்டு சுதீந்திராவின் தலையில் பட்டது. படுகாயம் அடைந்து அவர் விழுந்ததும், அங்கிருந்தவர்கள் ஓடி விட்டனர்.படுகாயம் அடைந்த சுதீந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து பந்தேஸ்வரா போலீசார் விசாரிக்கின்றனர்.


வாடகை தாய் பெயரில் குழந்தை விற்கும் கும்பல் கைது


பெங்களூரு : பெங்களூரில் வாடகை தாய் பெயரில் குழந்தை விற்கும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். ஏழைகளிடம் குறைந்த விலைக்கு குழந்தை வாங்கி, அதிக விலைக்கு விற்று மோசடி செய்துள்ளனர்.
பெங்களூரில் குழந்தை விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து டி.ஜி.பி., ஹரிஷ் பாண்டே தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசாருக்கு விசாரணையில் கிடைத்த தகவலை அடுத்து, குழந்தை விற்பனை கும்பல் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளது. இந்த கும்பல் குழந்தை இல்லாத தம்பதியை இலக்காக வைத்து செயல்பட்டு வந்துள்ளது. ஏழை தம்பதிகளிடம் குழந்தைகளை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்று வந்துள்ளனர். குழந்தை இல்லாத தம்பதிகளிடம் இந்த கும்பல், வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று தருகிறோம் என லட்சக்கணக்கில் பணம் பெற்று கொள்வர். பின் ஏழைகளிடம் வாங்கிய குழந்தையை வாடகை தாய் மூலம் பெற்ற குழந்தை என கூறி கொடுத்து விடுவர். அதன்படி 1.5 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை குழந்தை விற்பனை நடந்துள்ளது.
இது தொடர்பாக தேவி சண்முகம்மா, 35, மகேஷ்குமார்,45, ஜனார்த்தன், 48 ரஞ்சனா,30, ரவி பிரசாத், 35 தன லட்சுமி, 35 ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.இது குறித்து டி.சி.பி ஹரிஷ் பாண்டே கூறியதாவது:சாம்ராஜ்பேட்டை மருத்துவமனையில் இருந்து ஒரு குழந்தை கடத்தி விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து பசவனகுடி மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையின் போது மருத்துவமனையில் நோயாளிகள், ஊழியர்களை தவிர வேறு சிலர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடி வந்தது தெரிந்தது. அவர்களை பிடித்து விசாரித்தபோது நான்கு குழந்தை விற்பனை குற்றங்கள் தெரியவந்தன.
இவர்கள் சென்னை, மஹாராஷ்டிடிரா, கர்நாடகாவில் இதுவரை 11 குழந்தை விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தை விற்பனையில் ஈடுபட்ட கும்பலில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டை சோதனை செய்தபோது 28 குழந்தைகளை விற்றதற்கான அடையாள அட்டைகள் கிடைத்தன. அந்த அட்டைகள், கெங்கேரி மருத்துவமயில் இருந்து பெறப்பட்டதாகும். இது வரை 11 குழந்தைகள் விற்பனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்னும் 17 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. குழந்தைகளை விற்ற பெற்றோரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.தற்போது இந்த கும்பலிடம் இருந்து 13 குழந்தைகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.


டி.ஆர்.டி.ஓ. பரிசோதனை மையத்தை உளவு பார்த்த பாகிஸ்தான் பெண்


புவனேஷ்வர் : ஒடிசாவில் உள்ள டி.ஆர்.டி.ஓ., பரிசோதனை மையத்தை, பாகிஸ்தானை சேர்ந்த பெண் உளவு பார்த்ததாக அம்மாநில போலீசார் தெரிவித்தனர்.
ஒடிசாவில், டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, நம் முப்படைகளில் பயன்படுத்தப்படும் ஏவுகணைகள் உள்ளிட்டவை பரிசோதிக்கப்படுகின்றன. இந்த பரிசோதனை மையம், 'ஆன்லைன்' வாயிலாக உளவு பார்க்கப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக, கடந்த மாதம் ஐந்து அதிகாரிகள் கைதாகினர்.
இது குறித்து, ஒடிசா குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சஞ்சீவ் பாண்டா கூறியதாவது: பாக்.,கை சேர்ந்த பெண் ஒருவர், இந்த ஐந்து அதிகாரிகளிடமும் வெவ்வேறு பெயர்களில், 'பேஸ்புக்' வாயிலாக நட்பாகி உள்ளார். அந்த பெண்ணின் பேஸ்புக் கணக்கு பாகிஸ்தானில் இருந்து இயக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர், இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனியில் இருந்து பேசுவதைப் போல, தொழில்நுட்ப மோசடி செய்துள்ளார்.


உலக நிகழ்வுகள்


அருணாசல பிரதேசம் இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களை இந்திய படை வீரர்கள் பிடித்துள்ளனர். இவர்களிடம் விசாரணை நடக்கிறது.

ஆப்கனில் குருத்வாரா சூறை; சீக்கியர்கள் சிறைப்பிடிப்பு
காபூல்: ஆப்கனை இரு மாதங்களுக்கு முன் கைப்பற்றிய தலிபான் பயங்கரவாதிகள், அனைத்து மதத்தினரும் அவரவர் விருப்பப்படி வழிபாடு நடத்த அனுமதிக்கப்படுவர் என, தெரிவித்திருந்தனர். அதற்கு மாறாக நேற்று, தலைநகர் காபூலில் உள்ள சீக்கியர்களின் குருத்வாராவுக்குள் தலிபான்கள் நுழைந்து அங்கிருந்த சிலைகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
மேலும், வழிபாட்டு சின்னங்கள், பூஜை பொருட்கள் ஆகியவற்றையும் சூறையாடினர். கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களும் உடைத்து நொறுக்கப்பட்டன. கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த சீக்கியர்களையும் தலிபான்கள் சிறை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த வன்முறை சம்பவத்தை, உலக சீக்கியர் பேரவை தலைவர் புனீத் சிங் சந்தோக் உறுதிசெய்துள்ளார்.


அமெரிக்க உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கி சூடு; 4 பேர் காயம்


டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஆர்லிங்டனில் உள்ள டிம்பர்வியூ உயர்நிலை பள்ளியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில்4 பேர் காயமடைந்தனர். அவர்களில் 3 பேர் மாணவர்கள், கர்ப்பிணி ஆசிரியர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டு உள்ளது. துப்பாக்கி சூடு நடத்திய 18 வயது திமோதி ஜார்ஜ் சிம்ப்கின்ஸ் என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
08-அக்-202114:23:32 IST Report Abuse
Vena Suna இவனுங்களை பொது மக்கள் பின்னி பெடல் எடுத்தா தான் உருப்படும்.
Rate this:
Cancel
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
07-அக்-202121:00:39 IST Report Abuse
தஞ்சை மன்னர் ""யோக" ராஜ், 45, என்ற ""யோகா" ஆசிரியர் இந்த விஷயத்தில் ஆர் எஸ் எஸ் காம பரம்பரை சேர்ந்தவன் போலவே இருக்கின்றாய்
Rate this:
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
08-அக்-202109:17:41 IST Report Abuse
Paramanஅப்பிடியா தெரியுது? எனக்கென்னவோ ராஜராஜ சோழனின் வாரிசு என்று கனவுகண்ட ஊழல் குடும்ப தலையின் தஞ்சை மன்னர்கள் என்று தங்களை தாங்களே நினைத்து கொண்டு இருக்கும் தீயமூக்கா கொத்தடிமை கூட்டத்தை சேர்ந்தவன் போல இருக்கிறது...
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
07-அக்-202117:29:47 IST Report Abuse
 rajan ஏண்டா நீ எந்த மாதிரியான யோகா சொல்லிக் கொடுத்த? மசாஜ் நிலையம், யோகா நிலையம் என்றாலே செக்ஸ் கூடாரமாகி விட்டது. அந்த பெண்ணுக்கு பெண் யோகா ஆசிரியை கிடைக்கலியா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X