முதல்வர் ஸ்டாலின் எதை அறிவித்தாலும் உடனே பாராட்டு அறிக்கையை வெளியிட்டு விடுங்கள்

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
மாநில சிறுபான்மையினர் நல கமிஷன் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை: 'நீட்' தேர்வின் அநீதியை வெளிச்சப்படுத்தி, மாநிலங்களால் நிர்வகிக்கப்படும் மருத்துவ கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையை மாநிலங்களே முடிவு செய்யவும், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவும், முதல்வர்களை அணி திரட்டும் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுகள்.நிரந்தரமாக ஒரு அறிக்கை தயாரித்து வைத்து
முதல்வர் ஸ்டாலின் எதை அறிவித்தாலும் உடனே பாராட்டு அறிக்கையை வெளியிட்டு விடுங்கள்

மாநில சிறுபான்மையினர் நல கமிஷன் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை: 'நீட்' தேர்வின் அநீதியை வெளிச்சப்படுத்தி, மாநிலங்களால் நிர்வகிக்கப்படும் மருத்துவ கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையை மாநிலங்களே முடிவு செய்யவும், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவும், முதல்வர்களை அணி திரட்டும் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுகள்.


நிரந்தரமாக ஒரு அறிக்கை தயாரித்து வைத்து கொள்ளுங்கள்... முதல்வர் ஸ்டாலின் புதிதாக எதை அறிவித்தாலும் உடனே அந்த பாராட்டு அறிக்கையை வெளியிட்டு விடுங்கள். அதே நேரம், உங்களின் காங்., எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை என இருந்து விடுங்கள்.



பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா பேட்டி: உள்ளாட்சி தேர்தலில் எங்கள் கூட்டணியில் இருந்து பா.ம.க., விலகியுள்ளதால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பிரிந்து நிற்பதால் அக்கட்சிக்குத் தான் நஷ்டம்.


யார் வெற்றி பெறுகின்றனர் என்பது தான், வரும் 12ல் தெரிந்து விடுமே... அந்த முடிவுக்கு பின், யாருடன் கூட்டணி என்பதை பா.ம.க., இறுதி செய்தும் விடும். அனேகமாக, தி.மு.க., கூட்டணியாகத் தான் இருக்கும்!



ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: கூடங்குளம் அணு உலைகளையே நிரந்தரமாக மூட வேண்டும் என கூடங்குளம், இடிந்தகரை மக்கள் போராட்டங்களை நடத்திய நிலையில், அங்கேயே அணுக் கழிவு சேகரிப்பு மையத்தை அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது, கடும் கண்டனத்திற்கு உரியது.


தமிழக அரசியல் தலைவர்களில் பெரும்பாலானோர் அணுக் கழிவு சேகரிப்பு மையத்திற்கு அறிக்கை அளித்து முடித்து, உ.பி., விவகாரத்திற்கு போய் விட்டனர்... வழக்கமாக எல்லாவற்றிலும் முந்தும் நீங்கள், இந்த முறை பிந்தி விட்டீர்களே!



தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி அறிக்கை: இந்திராவில் துவங்கி இப்போது பிரியங்கா வரை, காங்கிரஸ் கட்சியின் தேச விரோத செயல்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. பாரத மாதாவை வீழ்த்தி விட்டு, எப்படியாகிலும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோளாக உள்ளது.


latest tamil news




முன்னாள் பிரதமர் இந்திராவின் சாயலாக பிரியங்காவை கருதும் காங்கிரசார், '44 ஆண்டுகளுக்கு முன், அக்., 4ல் இந்திரா சிறைபிடிக்கப்பட்டது போல, அதே தேதியில் பிரியங்காவும் சிறை பிடிக்கப்பட்டார்' என ஒப்பிட்டு, பெருமைபட்டுக் கொள்கின்றனரே!



தமிழக காங்., துணைத் தலைவர் வாழப்பாடி ராம சுகந்தன் அறிக்கை: உ.பி.,யில் விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, அங்கே செல்ல விரும்பும் பிற மாநில முதல்வர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏன் தடுத்து நிறுத்தப்படுகின்றனர்; அவர்களைப் பார்த்து, பா.ஜ., யோகி ஆதித்யநாத் அரசு ஏன் பயப்படுகிறது?


ஏற்கனவே கலவர பூமியாக இருக்கும் இடத்திற்கு சென்று, வீர வசனம் பேசி, சோர்ந்து கிடக்கும் மக்களைப் போராட துாண்டி விடுவரோ என்ற அச்சம் தான் காரணமாக இருக்கும்!



பா.ஜ.,வில் உள்ள நடிகை குஷ்பு அறிக்கை: உ.பி.,யில் வாகனம் மோதி எட்டு பேர் கொல்லப்பட்டது மிகப் பெரிய குற்றம். அதற்கு யார் காரணமோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த நபர் எத்தகையவராக இருந்தாலும் நடவடிக்கை அவசியம். மனித உயிர்களுக்கு மேலாக ஒன்றுமில்லை. இந்த நாட்டின் அடிப்படையே மனிதாபிமானம் தான்.


சட்டசபை தேர்தலுக்கு பின், சில மாதங்களாக அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த, 'குஷ்பு கட்சி தாவுகிறார்' என்பது இப்போது உறுதியாகி உள்ளது. உலகம் உருண்டை என்பதை மெய்ப்பிப்பது போல, மீண்டும் காங்கிரசுக்கே போகப் போகிறாரா?


Advertisement


வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
07-அக்-202119:18:39 IST Report Abuse
Poongavoor Raghupathy திமுக மந்திரிகளுக்கு முக்கிய வேலை என்னவென்றால் மந்திரிகள் ஸ்டாலினின் புகழை பாடிக்கொண்டுதான் இருக்கவேண்டும் அத்தோடு கூட உதயநிதியை கும்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும். மந்திரிகள் இந்த வேலையை செய்யாவிட்டால் மந்திரி பதவி பறிக்கப்படும்.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
07-அக்-202117:06:36 IST Report Abuse
sankaseshan தர்மராஜு எந்த ஹெலிகாப்ட ராய் சொல்லற இத்தாலிய பார்ட்டி மாட்டி கொண்ட லாக் ஹீடு ஹெலிகாப்டராய ?
Rate this:
Cancel
anbu - London,யுனைடெட் கிங்டம்
07-அக்-202116:35:34 IST Report Abuse
anbu அமெரிக்கா ஐரோப்பா யாவும் பாராட்டுகின்றன. நம்பியே ஆக வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X