பொது செய்தி

தமிழ்நாடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: விரைவில் சாட்சி விசாரணை

Added : அக் 07, 2021
Share
Advertisement
கோவை:பொள்ளாச்சி பாலியல் வழக்கில், விரைவில் சாட்சி விசாரணை துவங்க உள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லுாரி மாணவி மற்றும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய வழக்கில், திருநாவுக்கரசு,25, சபரிராஜன்,25, சதீஷ்,28, வசந்தகுமார்,27, மணிவண்ணன்,28, ஹெரன்பால்,29, பாபு,27, பொள்ளாச்சி அ.தி.மு.க., மாணவரணி அருளானந்தம், 34, மற்றும் அருண்குமார் ஆகிய ஒன்பது பேர்

கோவை:பொள்ளாச்சி பாலியல் வழக்கில், விரைவில் சாட்சி விசாரணை துவங்க உள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லுாரி மாணவி மற்றும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்திய வழக்கில், திருநாவுக்கரசு,25, சபரிராஜன்,25, சதீஷ்,28, வசந்தகுமார்,27, மணிவண்ணன்,28, ஹெரன்பால்,29, பாபு,27, பொள்ளாச்சி அ.தி.மு.க., மாணவரணி அருளானந்தம், 34, மற்றும் அருண்குமார் ஆகிய ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது கோவை மகளிர் கோர்ட்டில், சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, விரைவில் சாட்சி விசாரணை துவங்க உள்ளது. 'இன்கேமரா' முறையில் விசாரிக்க தனியாக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிறையிலிருந்தபடி காணொளி வாயிலாக ஒன்பது பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து, வரும் 20ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X