பொது செய்தி

தமிழ்நாடு

நிலக்கொடை குறியீடுகள் கல்வெட்டு கண்டெடுப்பு

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே, நிலக்கொடை குறியீடுகள் அடங்கிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.இது குறித்து திருப்பத்துார் துாய நெஞ்சக் கல்லுாரி பேராசிரியர் பிரபு கூறியதாவது: திருப்பத்துார் அடுத்த மூக்கனுார் அருகே மேலக்குட்டை ஏரியின் அருகே தனபால் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நடுவில் சிறிய பாறை உள்ளது. இதை அப்பகுதி மக்கள் சலவை கல்லாக
ஜோலார்பேட்டை, நிலக்கொடை, குறியீடுகள், கல்வெட்டு, கண்டெடுப்பு

திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே, நிலக்கொடை குறியீடுகள் அடங்கிய கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

இது குறித்து திருப்பத்துார் துாய நெஞ்சக் கல்லுாரி பேராசிரியர் பிரபு கூறியதாவது: திருப்பத்துார் அடுத்த மூக்கனுார் அருகே மேலக்குட்டை ஏரியின் அருகே தனபால் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நடுவில் சிறிய பாறை உள்ளது. இதை அப்பகுதி மக்கள் சலவை கல்லாக பயன்படுத்தி வந்தனர். அந்த பாறையை ஆய்வு செய்ததில், கி.பி., 16 ம் நுாற்றாண்டை சேர்ந்த நிலக்கொடை குறியீடுகள் அடங்கிய கல்வெட்டு என தெரியவந்துள்ளது.


latest tamil news


அதில், முக்கோண வடிவமுள்ள பாறையில், சூரியன், பிறைச்சந்திரன் உருவங்கள் மேற்புறமும், கீழே குடையும், அருகே கமண்டலமும் அமைந்துள்ளன. இவற்றின் அருகில் அளவுகோல் காட்டப்பட்டுள்ளன. இந்த குறியீடுகள் திருமாலின் வாமன அவதாரத்தினை குறிப்பிடுவதாகும்.

இதிலுள்ள எழுத்துக்கள் கோட்டோவியமாக வரையப்பட்டுள்ளது. இந்த கோட்டோவிய கல்லானது ஒரு அரசர் தமது ஆட்சிக்குட்பட்ட நிலத்தினை வைணவக் கோவிலுக்காக கொடையாக கொடுத்த விவரத்தையும் சுட்டிக்காட்டுகின்றன. இங்குள்ள ஓவியத்தின் மேலுள்ள சந்திர சூரிய உருவங்கள் இக்கொடைக்கு சாட்சியாக குறிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது, ஆய்வு மாணவர்கள் தரணிதரன், கிருஷ்ணகுமார், விஷ்ணு, ஞானவேல் உடனிருந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
07-அக்-202114:16:21 IST Report Abuse
vpurushothaman கல்வெட்டைக் காப்பாற்றிப் பேணுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X