‛ஜியோ' இணைப்பில் சிக்கல்; சமூக ஊடகத்தில் குவிந்தது மீம்ஸ்

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (8) | |
Advertisement
புதுடில்லி: 'ரிலையன்ஸ் ஜியோ' சேவையில் பரவலான குறைபாடு ஏற்பட்டதை அடுத்து, சமூக வலைதளங்களில் புகார்கள் மற்றும் 'மீம்'கள் குவிந்தன.'பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக ஊடகங்கள், உலகின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களுக்கு முன் முடங்கின. ஆறு மணி நேரத்திற்குப் பின் தொழில் நுட்பக்கோளாறு சரி செய்யப்பட்டது.தற்காலிக முடக்கம்இந்த
JioDown, Reliance, Memes, ஜியோ, இணைப்பு, சிக்கல், மீம்ஸ்

புதுடில்லி: 'ரிலையன்ஸ் ஜியோ' சேவையில் பரவலான குறைபாடு ஏற்பட்டதை அடுத்து, சமூக வலைதளங்களில் புகார்கள் மற்றும் 'மீம்'கள் குவிந்தன.

'பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட சமூக ஊடகங்கள், உலகின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில தினங்களுக்கு முன் முடங்கின. ஆறு மணி நேரத்திற்குப் பின் தொழில் நுட்பக்கோளாறு சரி செய்யப்பட்டது.


தற்காலிக முடக்கம்

இந்த சம்பவத்தின் போது, 'பேஸ்புக்' நிறுவனத்தையும் அதன் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க்கையும் விமர்சித்து, 'டுவிட்டர்' உள்ளிட்ட இதர சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் குவிந்தன.


latest tamil news


இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின், 'மொபைல் போன்' சேவையில் பரவலாக சிக்கல் ஏற்பட்டது. ஏராளமான வாடிக்கையாளர்களின் இணையம் மற்றும் அலைபேசி சேவைகள் தற்காலிகமாக முடங்கின. இது குறித்து, பலர் சமூக ஊடகங்கள் வாயிலாக புகார் தெரிவித்தனர். ரிலையன்ஸ் நிறுவனத்தை கிண்டல் செய்து ஏராளமான மீம்ஸ்களும் பகிரப்பட்டன.


விரைவில் சீராகும்

இந்த குறைபாடு குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் ஏற்பட்டதா? அல்லது நாடு முழுதும் பரவலாக ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் இல்லை. சுமார் 4,000த்துக்கும் மேற்பட்ட பயனாளர்களின் இணைப்பு முடங்கியதாக கூறப்படுகிறது.இது குறித்து, ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்ட அறிக்கையில், 'சிரமத்திற்கு வருந்துகிறோம். தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இணைப்பு சீராகும்' என, தெரிவிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
07-அக்-202116:36:13 IST Report Abuse
Natarajan Ramanathan JIO customer service மிகவும் மோசம். எந்த புகார் அளித்தாலும் அதை சரி செய்வதாக கூறுகிறார்கள். ஆனால் அதன் பிறகு ஒன்றுமே நடப்பதில்லை. 30 நாட்கள் JIO இலவச சேவை என்று ஒரு மெகா மோசடி நடக்கிறது. அதில் வாங்கும் ₹.1500 சேவை டெபாசிட் தொகையில் ₹.500 மட்டுமே திரும்ப தருகிறார்கள். மீதம் வருவதே இல்லை. போன் செய்தாலும் பதில்இல்லை
Rate this:
Cancel
07-அக்-202112:24:13 IST Report Abuse
சசிக்குமார் ஜியோவாவது பரவாயில்லை இந்த வோடபோன் எப்ப டவர் வரும் போகுமின்னே தெரிய மாட்டேங்குது. ஒரு நாளைக்கு 6 மணிநேரம் டவரே காட்ட மாட்டேங்குது
Rate this:
Cancel
THANGARAJ - CHENNAI,இந்தியா
07-அக்-202110:18:13 IST Report Abuse
THANGARAJ ஒரு மாதம் (30/31 நாட்கள்) என்பதை 28 நாட்கள் என்ற புது கண்டுபிடிப்புகளாக நம்மிடம் ஆண்டுக்கு 13 மாதமாக கணக்கிட்டு ரீ-சார்ஜ் செய்யவைத்த டெலிகாம்ஸ், (TRAI - மக்களுக்காக வாய்மூடி மௌனம் விரதம் இருக்கிறது). தொழில் நுட்ப கோளாறு என்று வரும்போது "தடங்கலுக்கு வருந்துகிறோம்" என்று கூறுவதை விடுத்து, ஒவ்வொரு தடங்கலுக்கு குறைந்தது ரூ 10 ரீ-சார்ஜ் அல்லது ஒரு நாள் இலவச டேட்டா / கால் போன்றவை தானாகவே செய்து இருந்தால், நாமும் அவர்களுடைய வருத்தத்தை ஏற்கலாம்.
Rate this:
இந்து. இந்தியா. இந்துஸ்தான்வருடாந்திர கட்டணம், மாதாந்திர கட்டணம், talktime recharge, sms recharge, rate cutter, outgoing 75 paisa, ஒரு ஜிபி டேட்டா 350 ரூபாய்க்கு என விற்றுக்கொண்டு இருந்தது ஏர்டெல். அதை வெறும் 35 பைசாவக்கியது ஜியோ. நினைவிருக்கட்டும்....
Rate this:
THANGARAJ - CHENNAI,இந்தியா
07-அக்-202112:29:38 IST Report Abuse
THANGARAJசரி தான். இந்திய மக்களுக்காக நஷ்டத்திற்கு டெலிகாம் தொழில் நடத்துகிறார்களா? இந்திய மக்கள் சந்தையை பெருமளவில் கொண்டு 35 பைசா என்றாலும் தினசரி லாபம் எவ்வளவு என தெரியுமா? இவர்களுக்காக இந்தியா அரசு கொடுத்த சலுகைகள் எவ்வளவு? அத்தனை சலுகை பணமும் நீங்களும் வாரியாக செலுத்தியது தானே? முதன் முதலில் கால் ரிங் நேரம் குறைவு மூலமாக சம்பாரித்த தொகை தெரியுமா? பிற டெலிகாம், BSNL, AIRTEL, Idea Phone போன்றவை நஷ்டம் எவ்வளவு தெரியுமா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X