பொது செய்தி

தமிழ்நாடு

மேல்மலையனுார் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
செஞ்சி:மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் அனுமதியின்றி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.விழுப்புரம் மாவட்டம், மேல்மலைனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று புரட்டாசி மாத மகாளய அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி நடந்தது.நேற்று காலை 4:00 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக் கவச அலங்காரம் நடந்தது. இரவு 7:00
 மேல்மலையனுார் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

செஞ்சி:மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் பக்தர்கள் அனுமதியின்றி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது.விழுப்புரம் மாவட்டம், மேல்மலைனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று புரட்டாசி மாத மகாளய அமாவாசை ஊஞ்சல் உற்சவம் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி நடந்தது.நேற்று காலை 4:00 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்கக் கவச அலங்காரம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து கோவில் பிரகாரத்தில் சிவ வாத்தியம், மேள, தாளம் முழங்க ஊஞ்சல் உற்சவம் நடந்தது. கோவில் பூசாரிகள் தாலாட்டு பாடல்களை பாடினர். இரவு 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு மற்றும் அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X