கோழி வளர்ப்பு மோசடி வழக்கு: பங்குதாரருக்கு 10 ஆண்டு சிறை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோழி வளர்ப்பு மோசடி வழக்கு: பங்குதாரருக்கு 10 ஆண்டு சிறை

Added : அக் 07, 2021
Share
கோவை;நாட்டுக் கோழி வளர்ப்பு நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில், பங்குதாரருக்கு 10 ஆண்டுசிறை தண்டனை விதிக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள சரளையில் பாஸ்கரன்,37, சேகர்,40, குமார்,49, ஆகியோர், 'பாஸ் பவுல்ட்ரி பார்ம்ஸ்' என்ற பெயரில் நாட்டுக் கோழி வளர்ப்பு நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். ஒரு லட்சம் டெபாசிட் செய்வோருக்கு, மாதம் 8,000 ரூபாய் வட்டி, வருட போனஸ் 8,000
 கோழி வளர்ப்பு மோசடி வழக்கு: பங்குதாரருக்கு 10 ஆண்டு சிறை

கோவை;நாட்டுக் கோழி வளர்ப்பு நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில், பங்குதாரருக்கு 10 ஆண்டுசிறை தண்டனை விதிக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள சரளையில் பாஸ்கரன்,37, சேகர்,40, குமார்,49, ஆகியோர், 'பாஸ் பவுல்ட்ரி பார்ம்ஸ்' என்ற பெயரில் நாட்டுக் கோழி வளர்ப்பு நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். ஒரு லட்சம் டெபாசிட் செய்வோருக்கு, மாதம் 8,000 ரூபாய் வட்டி, வருட போனஸ் 8,000 ரூபாய் தருவதாகவும் விளம்பரப்படுத்தினர். ஆனால், டெபாசிட் செய்த, 98 பேருக்கு பணத்தை திருப்பி தராமல், 1.40 கோடி மோசடி செய்தனர்.
ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, 2013, ஜூன், 11ல், மூவரையும் கைது செய்து, கோவை டான்பிட் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். எட்டு ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.குற்றம் சாட்டப்பட்டவர்களில், சேகருக்கு, 10 ஆண்டு சிறை, 76 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பளித்தார். குமார் விடுதலை செய்யப்பட்டார். பாஸ்கரன் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருப்பதால், அவர் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டு விசாரணை நிலுவையில் உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X