பொது செய்தி

தமிழ்நாடு

ஆயுதபூஜைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை: ‛‛ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்,'' என, அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 12, 13ம் தேதிகளில் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்துத்துறை கூடுதல் பேருந்துகளை இயக்க உள்ளது. அதன்படி, வெளியூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையம்,
AyudhaPooja, Special Bus, Tamilnadu, TN, Rajakannappan, ஆயுதப்பூஜை, சிறப்பு பேருந்து, தமிழகம், ராஜகண்ணப்பன், அமைச்சர்

சென்னை: ‛‛ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்,'' என, அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு வரும் 12, 13ம் தேதிகளில் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்துத்துறை கூடுதல் பேருந்துகளை இயக்க உள்ளது. அதன்படி, வெளியூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய 3 இடங்களில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணபன் அறிவித்துள்ளார். அதன்படி, பேருந்துகள் இயக்கப்படும் வழித்தடங்கள் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து


* திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள்.
* போளூர், சேத்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்.
* திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் செல்லும் பேருந்துகள்.
* திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.


பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து


* வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், திருத்தணி மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள்.


கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து


* மேற்குறிப்பிட்ட ஊர்களை தவிர இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் (புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் வழி ஈ.சி.ஆர்), மயிலாடுதுறை, தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, அரியலூர், ஜெயங்கொண்டம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர்.

மேற்கூறிய 3 இடங்களில் இருந்து வரும் 12, 13ம் தேதிகளில் மக்கள் பேருந்துகளில் பயணிக்கலாம். இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
07-அக்-202118:54:35 IST Report Abuse
duruvasar அப்போ இந்த பழைய இரும்பு பொருட்களை ஆயுத பூஜையில் வைக்கமுடியாதா ?
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
07-அக்-202118:37:55 IST Report Abuse
S.Baliah Seer ஆயுதம் ஓர் வன்முறை சொல். அதற்கு பூஜை என்பது -அதாவது யுத்தத்திற்கு முன் ஆயுதங்களை தூசி, தட்டி வைப்பது என்பதாகும். ஆகவே இக்காலத்திற்குப் பொருந்தாத ஆயுத பூஜையை தடை செய்ய வேண்டும். அதற்கு சிறப்பு பஸ்கள் எதற்கு?
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
07-அக்-202116:20:21 IST Report Abuse
r.sundaram இங்கு கொரோனா வராதா? அது சத்தியம் செய்து கொடுத்திருகிறதாக்கும். கோவிலில் மட்டும்தான் நான் வருவேன் என்று சொல்கிறது போலிருக்கிறது. திமுகவினருக்கு இல்லாத பக்தி கொரோனாவுக்கு, கோவிலை திறந்தால் உடனே உள்ளே போய் விட துடிக்கிறது போலிருக்கிறது. ஆயுத பூஜை ஹிந்து பண்டிகை, அதை காரணம் காட்டி சம்பாதிக்கும் அரசு, ஹிந்து கோவில்களை மட்டும் திறக்க மறுக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X