பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் 7 சதவீதத்தினருக்கு மட்டுமே தயக்கம்: ஆய்வில் தகவல்

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கோவிட் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது. அப்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ள 60 சதவீதம் பேர் தயக்கம் காட்டினர். ஆனால் பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய கோவிட் 2வது அலை மற்றும் தடுப்பூசி குறித்து அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வு நடவடிக்கைகளால் தடுப்பூசி மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்தது.இந்நிலையில் தற்போது

புதுடில்லி: இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் முதல் கோவிட் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது. அப்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ள 60 சதவீதம் பேர் தயக்கம் காட்டினர். ஆனால் பெரும் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்திய கோவிட் 2வது அலை மற்றும் தடுப்பூசி குறித்து அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வு நடவடிக்கைகளால் தடுப்பூசி மீதான ஆர்வம் மக்களிடையே அதிகரித்தது.



latest tamil news



இந்நிலையில் தற்போது இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான ஆர்வம் குறித்து கண்டறிய 'லோக்கல் சர்க்கிள்ஸ்' என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியது. அதன் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் தெரிவித்து உள்ளதாவது: நாடு முழுவதும் 301 மாவட்டங்களில் 12,810 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் வெறும் 7 சதவீதத்தினர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டுவது தெரியவந்துள்ளது. அதற்கு தடுப்பூசிகளுக்கான அவசர பரிசோதனை, அவசர ஒப்புதல், பக்கவிளைவுகள் போன்றவற்றை அவர்கள் காரணங்களாக கூறியுள்ளனர்.


latest tamil news



தற்போதைய தடுப்பூசிகளின் செயல்திறன் உருமாறிய கோவிட் தொற்றுகளை தடுக்க போதுமானதாக இல்லை எனக் கருதி, 27 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்த திட்டமிடாமல் உள்ளனர். இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோர் மக்கள்தொகை 94 கோடியாக இருக்கிறது. இதில் 68 சதவீதத்தினர் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-அக்-202120:52:19 IST Report Abuse
ராம் ஊசி போட்டுக் கொள்ளும் அந்தப் பெண்மணி யாரோ? அவரைப் பற்றிய தகவல்கள் இருப்பின் தயவுகூர்ந்து பகிரவும்🙏🏿
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
07-அக்-202118:57:02 IST Report Abuse
duruvasar சரக்கும் மிடுக்கும் உள்ளவர்களாக இருப்பாங்க.
Rate this:
Cancel
R S BALA - CHENNAI,இந்தியா
07-அக்-202114:28:51 IST Report Abuse
R S BALA 7 சதவிகிந்தான அவங்கள விட்டு தொலைங்க எப்படியாவது போகட்டும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X