பலவீனமான அமெரிக்க அரசுடன் சீனா போர் புரியும்: டிரம்ப்

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
வாஷிங்டன்: 'பலவீனமான அமெரிக்காவை சீனா மதிப்பதில்லை. அமெரிக்காவுடன் சீனா நிச்சயம் போர் புரியும்' என, முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் இருந்து வருகிறது. இந்நிலையில், உலக வர்த்தக சந்தையில் இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜனநாயகக் கட்சி தலைமையில்

வாஷிங்டன்: 'பலவீனமான அமெரிக்காவை சீனா மதிப்பதில்லை. அமெரிக்காவுடன் சீனா நிச்சயம் போர் புரியும்' என, முன்னாள் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.



latest tamil news



சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் இருந்து வருகிறது. இந்நிலையில், உலக வர்த்தக சந்தையில் இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்நிலையில் ஜனநாயகக் கட்சி தலைமையில் சீனாவுடனான உறவு குறித்து முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து உள்ளதாவது:


latest tamil news



அதிபர் தேர்தலில் மோசடி செய்யப்பட்டதால், அமெரிக்கா இப்போது பலவீனமான மற்றும் ஊழல் நிறைந்த தலைமையைக் கொண்டிருக்கிறது. அதற்கான மிகச் சிறந்த உதராணம், ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியது தான். தலிபான்களிடம் அமெரிக்கா சரணடைந்துவிட்டதையே காட்டுகிறது. இதனால் பலவீனமான அமெரிக்காவை சீனா மதிப்பதில்லை. அமெரிக்காவுடன் சீனா நிச்சயம் போர் புரியும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian - Vellore,இந்தியா
07-அக்-202118:43:33 IST Report Abuse
Indian ஆன்டி அமெரிக்கன் டிரம்ப், உடனடியாக அவரை தேசதுரோக சட்டத்தில் கைது செய்து உள்ளே தள்ள வேண்டும்
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
07-அக்-202117:29:58 IST Report Abuse
Sanny தனது சொந்த நாட்டையே பலவீனமான நாடு என்று எதிரிக்கு காட்டிகொடுக்கிறார். பிறகு எப்படி....?
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
07-அக்-202116:30:30 IST Report Abuse
Milirvan கறுப்பின போதை ஆசாமி, போலீசால் முரட்டுத்தனமாக கொல்லப்பட்டதை கண்டிப்பதற்காக. வெள்ளையர்களுக்கு எதிராக செயல்படுவதாக நினைத்து தான் வசிக்கும் நாட்டையே சீன கைகூலியிடம் கொடுத்து விட்டார்கள்.. இப்போது அசிங்கப்படுகிறார்கள்.. பாரதத்திலும் இப்படிப்பட்டவர்கள் புழுத்துப் போயிருக்கிறார்கள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X