பொது செய்தி

இந்தியா

தமிழகம் உள்பட நாடு முழுவதும் 35 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள்; பிரதமர் மோடி திறந்து வைப்பு

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் பி.எம்., கேர்ஸ் நிதி மூலம் அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள 35 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், சேலம், தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் 70 ஆக்சிஜன் ஜெனரேட்டர்களும் திறந்துவைக்கப்பட்டன.பி.எம்., கோ்ஸ் நிதியத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமா்
Modi, Launch, Oxygen Plants, PM CARES, ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள், பிரதமர், மோடி, பிஎம் கேர்ஸ்

புதுடில்லி: நாடு முழுவதும் பி.எம்., கேர்ஸ் நிதி மூலம் அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள 35 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், சேலம், தர்மபுரி உள்ளிட்ட இடங்களில் 70 ஆக்சிஜன் ஜெனரேட்டர்களும் திறந்துவைக்கப்பட்டன.

பி.எம்., கோ்ஸ் நிதியத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள பிஎஸ்ஏ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை பிரதமா் நரேந்திர மோடி இன்று (அக்.,7) நாட்டுக்கு அா்ப்பணித்தார். உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், உத்தரகண்ட் முதல்வர், உத்தரகண்ட் கவர்னர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாடு முழுவதும் 1224 பிஎஸ்ஏ ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க நிதி வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் 1,100க்கும் அதிகமான நிலையங்களில் உற்பத்தியை துவங்கிவிட்டன. இதன்மூலம் நாள்தோறும் 1,750 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மேலும் 35 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
20 ஆண்டுகளுக்கு முன்பு நான் குஜராத் முதல்வராக இருந்தேன். முதல்வர் ஆவேன் என்றோ, பிரதமர் ஆவேன் என்றோ கனவு கண்டதில்லை.


latest tamil newsநாம் கோவிட் தொற்றுக்கு எதிராக பல தடைகளை கடந்து வந்துள்ளோம். கோவிட் அச்சுறுத்தலை சிறப்பாக எதிர்கொண்டோம். ஆக்சிஜன் விநியோகத்திற்காக சிறப்பு ரயில்களை துவக்கினோம்; விமானப் படையும் ஆக்சிஜனை கொண்டுசெல்ல உதவியது. இதற்கெல்லாம் பி.எம்.கேர் நிதி பெரும் உதவியாக இருந்தது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் கோவிட்டை எதிர்கொள்ள உதவிப்புரிந்தது.


latest tamil newsஇதுவரை 93 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விரைவில் 100 கோடி கோவிட் தடுப்பூசி டோஸ் செலுத்தி சாதனை படைப்போம். உத்தர்கண்ட் மாநிலத்தில் தகுதிவாய்ந்த 95 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதித்துள்ளது. இந்தியா உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை வழிநடத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.


தமிழகம்latest tamil newsபி.எம்., கேர்ஸ் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை, தர்மபுரி அரசு மருத்துவமனை, சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனை, பெரியக்குளம், கோவை, கடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 70 ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் திறந்து வைக்கப்பட்டன.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatakrishnan - Mumbai,இந்தியா
07-அக்-202121:53:21 IST Report Abuse
Venkatakrishnan அதெல்லாம் சரி மோடி அவர்களே... உங்கள் PM CARES நிதி உண்மையிலேயே மக்கள் நலனுக்காக என்றால் அதன் கணக்குகளை மறைப்பதற்கு காரணம் என்னவோ? உச்ச நீதி மன்றத்தில் பல வழக்குகள் தொடர்ந்தும், RTI மூலம் பலமுறை கேட்டும் அதற்கு பதில் சொல்ல இயலாமல் பயப்பட வேண்டிய அவசியம் என்ன?
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
07-அக்-202121:44:22 IST Report Abuse
Venkatakrishnan அது சரி... PM CARES அரசாங்க நிதியே இல்லை தனியார் நிதி என்று உச்ச நீதி மன்றத்தில் அசிங்கமாய் பதிலளித்து விட்டு எப்படி அந்த நிதியை அரசாங்க பணிக்கு செலவு செய்கிறார்கள்...? இந்த இந்து அதர்மவாதிகளுக்கு துதி பாடும் மங்குணிகள் இதைக் கூடவா சிந்திக்க மாட்டார்கள்...
Rate this:
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
07-அக்-202119:10:16 IST Report Abuse
Poongavoor Raghupathy மோடி நாடு முழுவதும் ஆக்சிஜென் உற்பத்தியை பெருக்குகிறார். ஆக்சிஜென் தட்டுப்பாட்டை நீக்கிவிட்டார். திமுக சொல்லுவது என்னவெனில் ஸ்டாலின் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை இல்லாமல் செய்தார் என்று திமுக மக்களை ஏமாற்றுகிறது. மோடி இல்லையெனில் நமது தேசம் அழிந்துவிடும் என்பதில் ஐயம் இல்லை. நமது தேசம் நன்றாக இருக்கவேண்டுமானால் மக்கள் நிம்மதியாக இருக்க நினைத்தால் மோடியை விட்டால் வேறு தலைவரை நாம் இதுவரை பார்க்க முடியவில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X