அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வின் சித்தாந்தந்தங்கள் எங்கள் பூஜை அறைக்கு வேண்டாம்: அண்ணாமலை

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (72)
Share
Advertisement
சென்னை: ‛‛தமிழகத்தில், பள்ளி, கல்லுாரிகள், திரையரங்குகள், டாஸ்மாக் கடைகள் போன்றவை திறந்திருக்கும் போது வாரவிடுமுறை நாட்களில் கோயில்களை திறந்து சுவாமியை தரிசிக்க அனுமதிக்க வேண்டும்,'' என்று தமிழகம் முழுவதும் முக்கிய கோயில்கள் முன் இன்று (அக்.,7ம் தேதி) பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வார இறுதிநாட்களான
தமிழகம், பாஜ ஆர்ப்பாட்டம், தி.மு.க., சித்தாந்தந்தங்கள், எங்கள் பூஜை அறைக்கு, வேண்டாம், அண்ணாமலை,

சென்னை: ‛‛தமிழகத்தில், பள்ளி, கல்லுாரிகள், திரையரங்குகள், டாஸ்மாக் கடைகள் போன்றவை திறந்திருக்கும் போது வாரவிடுமுறை நாட்களில் கோயில்களை திறந்து சுவாமியை தரிசிக்க அனுமதிக்க வேண்டும்,'' என்று தமிழகம் முழுவதும் முக்கிய கோயில்கள் முன் இன்று (அக்.,7ம் தேதி) பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வார இறுதிநாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு கோயில்களில் அதிகமான பக்தர்கள் கூடுவர் என்பதால் இந்த 3 நாட்களில் கோயில்களை திறக்க அனுமதி மறுத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வார இறுதி நாட்களில் கோயில்களை திறக்க வலியுறுத்தி சென்னை மண்ணடியில் காளிகாம்பாள் கோயில் முன் இன்று (அக்.,7 ம் தேதி) தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் பா.ஜ.,வினர், மகளிரணியினர் திரளானோர் பங்கேற்றனர்.


latest tamil news


ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பேசுகையில், ‛‛இல்லாத கொரோனாவை காரணம் காட்ட வேண்டாம். தி.மு.க.,வின் சித்தாந்தந்தங்களை எங்கள் பூஜை அறைக்கு கொண்டு வராதீர்கள். 10 நாட்களில் கோயில்களை திறக்காவிட்டால் சிறை செல்லவும் தயார். கோயில்களில் உள்ள நகைகள் தெய்வங்களுக்கு சொந்தமானவை அவற்றை உருக்கக்கூடாது. அந்த நகைகள் எங்கள் வீட்டு பெண்களும், ஆண்களும் உடல்நலமின்றி இருந்தால் வேண்டுதலுக்காக காணிக்கையாக அளித்தவை. அதேபோல் குடும்பத்தினர் நலமாக இருக்கவும் நகைகள் கோயிலுக்கு வழங்கப்பட்டவையாகும். '' இவ்வாறு அவர் பேசினார்.

மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் முன் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கோவில்களை திறக்க வலியுறுத்தி பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தியதால் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் கோவில்களை திறக்கக் கோரியும், கோவில் நகைகளை உருக்குவதைக் கண்டித்தும் தஞ்சை பெரிய கோவில் முன் பா.ஜ., வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அவிநாசி ரோடு, தண்டுமாரியம்மன் கோவில் எதிரே, ஹிந்து விரோத தி.மு.க., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தேசிய மகளிர் அணி தலைவி மற்றும் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநில பொதுச்செயலாளர் செல்வகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
08-அக்-202100:26:37 IST Report Abuse
Vena Suna பாருக்குள்ளே நல்ல கட்சி எங்கள் பாரதீய ஜனதா கட்சி ,ஞானத்திலே ,வீரத்தில், கல்வியிலே உயர் கட்சி...
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
08-அக்-202121:40:25 IST Report Abuse
Visu IyerBAR க்குள்ளவா.. ஆமா.. உளறல்களை பார்த்தால் அப்படி தானே தெரியுதுன்னு சொல்றீங்க புரிகிறது.. காலையில் சொன்னதை மாலையில் மறந்து விடுவார்கள்.. அம்பது நாளில் கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்று பிரதமர் சொன்னது நினைவில் இருக்கு.. அவருக்கு மறந்து போச்சு... ///ஞானம் இல்லே.. வீரம் இல்லே.. கல்வி இல்லே என்று சொல்ல வருகிறீர்கள் புரிகிறது.. என்ன செய்ய பொறுமையாக இருங்கள்.. அறிவும் திறமையும், அரசியல் முதிர்ச்சியும் மக்கள் நலனில் அக்கறையும், தேச நலனில் உண்மையான பற்றும் உள்ள அரசியல் வரலாறு பொருளாதாரத்தில் அடிப்படை அறிவும் பெற்ற பிரதமர் விரைவில் வருவார்.. அப்போ இந்தியா ஒளிரும்.. மக்கள் வாழ்வு மலரும்...
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
07-அக்-202121:29:27 IST Report Abuse
John Miller உலகம் முழுவதும் கொரோன கொடுமை இன்னும் சற்றும் குறையவில்லை. எனவே கோவில்களை இன்னும் ஒரு வருடத்திற்கு முழுமையாக மூடுவதே சரியான செயல் ஆகும்.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
08-அக்-202121:41:11 IST Report Abuse
Visu Iyerபிரதமர் வெளிநாடு போக கூடாதுன்னு சொல்றீங்க புரிகிறது../// அவர்களுக்கு புரியுமா...
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
07-அக்-202120:44:45 IST Report Abuse
Venkatakrishnan எப்படி இந்த சங்கிகளால் மட்டும் இப்படி ஒரு கீழ்த்தர அரசியலை செய்ய முடிகிறதோ.... இந்து மதத்தை இவர்களைவிட யாரும் இழிவுபடுத்த மாட்டார்கள்... வெறும் பணம், பதவிக்காக...
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
08-அக்-202121:41:59 IST Report Abuse
Visu Iyerஅதனால் தானே அவர்கள் நீங்கள் சொன்ன அந்த .....ங்கி களாக இருக்கிறார்கள்... "மங்கி" பாத் கேட்பதில்லையா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X