அரசியல் செய்தி

தமிழ்நாடு

காருக்கு பேன்சி நம்பர் வழங்க கல்வி அமைச்சர் பரிந்துரை கடிதம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
நாமக்கல் : தி.மு.க., இளைஞரணியை சேர்ந்தவருக்கு, கார் பேன்சி நம்பர் வழங்க ஆவன செய்யும்படி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பரிந்துரைத்த கடிதம் சமூக வலைதளங்களில் பரவுகிறது.தமிழகத்தில் இரு சக்கர வாகனம், கார், வேன், ஜீப், லாரி போன்ற வாகனங்களுக்கு, ஆர்.டி.ஓ., அலுவலகம் மூலம் பதிவு எண் வழங்கப்படுகிறது. அதில் குறிப்பிட்ட எண்ணை வாங்குவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.குறிப்பாக,
 காருக்கு பேன்சி நம்பர் வழங்க  கல்வி அமைச்சர் பரிந்துரை கடிதம்


நாமக்கல் : தி.மு.க., இளைஞரணியை சேர்ந்தவருக்கு, கார் பேன்சி நம்பர் வழங்க ஆவன செய்யும்படி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பரிந்துரைத்த கடிதம் சமூக வலைதளங்களில் பரவுகிறது.

தமிழகத்தில் இரு சக்கர வாகனம், கார், வேன், ஜீப், லாரி போன்ற வாகனங்களுக்கு, ஆர்.டி.ஓ., அலுவலகம் மூலம் பதிவு எண் வழங்கப்படுகிறது. அதில் குறிப்பிட்ட எண்ணை வாங்குவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.குறிப்பாக, நான்கு அல்லது மூன்று நம்பரும் ஒரே எண்ணாக வேண்டும் என்றால், 40 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி.,- எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரையின் பேரிலும், குறிப்பிட்ட எண்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதற்கான கட்டணத்தை வாகன உரிமையாளர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ், 'நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், காந்திபுரத்தை சேர்ந்த சாந்தி என்பவருக்கு, 'டி.என்.34-AJ--4567' என்ற எண்ணை வழங்க, போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு பரிந்துரைத்துள்ளார்.அமைச்சர் பரிந்துரைத்தவர், தி.மு.க., இளைஞரணியை சேர்ந்த தங்கமணி. அவர் அமைச்சரிடம் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறார். தன் தாய் சாந்தி பெயரில் கார் வாங்கிய தங்கமணி, பேன்சி நம்பருக்கு உரிய தொகை, 40 ஆயிரம் ரூபாயை, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் செலுத்தி, குறிப்பிட்ட பேன்சி நம்பர் பெற்றுள்ளார்.

அமைச்சர் பரிந்துரைத்த கடிதம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X