குலசேகரபட்டினம் தசரா விழா கொடியேற்றத்துடன் துவக்கம்| Dinamalar

குலசேகரபட்டினம் தசரா விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

Added : அக் 07, 2021
Share
துாத்துக்குடி : குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசராவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்களுக்கு அனுமதியில்லை. முக்கிய விழாவான சூரசம்ஹாரம் அக்.,15 இரவில் கோயில் முன்பிரகார மண்டபத்தில் நடக்கிறது.நவராத்திரி திருவிழாவையொட்டி மைசூர் தசரா விழாவிற்கு நிகராக துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் அருகே குலசேகரன்பட்டினம்
 குலசேகரபட்டினம் தசரா விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

துாத்துக்குடி : குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசராவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
கொரோனா கட்டுப்பாடுகளால் பக்தர்களுக்கு அனுமதியில்லை. முக்கிய விழாவான சூரசம்ஹாரம் அக்.,15 இரவில் கோயில் முன்பிரகார மண்டபத்தில் நடக்கிறது.நவராத்திரி திருவிழாவையொட்டி மைசூர் தசரா விழாவிற்கு நிகராக துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் அருகே குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா விழா பிரசித்தி பெற்றதாகும். பங்கேற்கும் பக்தர்கள் விரதம் இருந்து வெவ்வேறு வேடமணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

நிறைவு நாளில் இரவில் கடற்கரையில் நடக்கும் சூரசம்ஹாரம் விழாவில் லட்சக்கணக்கில் பக்தர்கள் பங்கேற்பார்கள். 2020ல் கொரோனாவால் விழா கடற்கரையில் நடக்கவில்லை.இந்த ஆண்டு தசரா திருவிழா நேற்று காலை 9.41க்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று இரவு முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் திருவீதி உலா நடந்தது.

தினமும் சுவாமி, அம்பாள் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்கிறது. அக்.15ல் சூரசம்ஹாரம் கோயில் முன்பிரகார மண்டபத்தில் நடக்கிறது. பக்தர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X