பொது செய்தி

தமிழ்நாடு

கன்னியாகுமரி, புதுவை, காரைக்காலில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை: ‛‛கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்,'' என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியசன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:இன்று அக்.,7 ம் தேதி: கடலோர மாவட்டங்கள் கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும்,
கன்னியாகுமரி, புதுவை, மிதமான மழை, சென்னை, வானிலை ஆய்வு மையம், தகவல்,

சென்னை: ‛‛கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்,'' என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியசன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
இன்று அக்.,7 ம் தேதி: கடலோர மாவட்டங்கள் கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் உள்மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


latest tamil news


நாளை 8 ம் தேதி: வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

அக்., 9 ம் தேதி: வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

அக்., 10 மற்றும் 11ம் தேதி: உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


latest tamil news




சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லோசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைஅளவு (சென்டி மீட்டரில்):

திருச்சி டவுன் 9 செ.மீ., தேவலகா, பந்தலுார் (நீலகிரி) தலா 8 செ.மீ., திருச்சி ஜங்சன் 6 செ.மீ., ஹாரிசன் எஸ்டேட்(நீலகிரி) 5 செ.மீ., சோலையாறு (கோவை), டிஜி.பி., அலுவலகம் (சென்னை), பாலவிடுதி (கரூர்) திருவாடானை (ராமநாதபுரம்) தலா 4 செ.மீ., நுங்கம்பாக்கம் (சென்னை), மகாபலிபுரம் (செங்கல்பட்டு), பள்ளிபட்டு (திருவள்ளூர்) ஒசூர் (கிருஷ்ணகிரி) தலா 3 செ.மீ., சென்னை (விமானநிலையம்), உசிலம்பட்டி (மதுரை), பெரியகுளம் (தேனி) தலா 2 செ.மீ.,
குறிப்பு: வரும் 10ம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்தழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது.


latest tamil news



மீனவர்களுக்கான எச்சரிக்கை:


வங்கக்கடல் பகுதிகள்:

வரும் 9 மற்றும் 10 ம் தேதி: அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


அரபிக்கடல் பகுதிகள்:

அக்.,7 முதல் மற்றும் 8ம் தேதி: மத்திய கிழக்கு மற்றும் கர்நாடகா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும், இடைஇடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X