தமிழில் அஞ்சலக படிவங்கள் எம்.பி.,யிடம் அதிகாரிகள் உறுதி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழில் அஞ்சலக படிவங்கள் எம்.பி.,யிடம் அதிகாரிகள் உறுதி

Added : அக் 07, 2021
Share
சென்னை : ''ஒரு மாதத்திற்குள், தமிழகம் முழுதும் உள்ள அஞ்சலகங்களுக்கு, தமிழில் அச்சடித்த படிவங்கள் வழங்கப்படும் என, தமிழக அஞ்சல்துறை தலைவர் உறுதி அளித்துள்ளார்,'' என, மதுரை தொகுதி எம்.பி., வெங்கடேசன் தெரிவித்தார்.அஞ்சலக சேமிப்பு கணக்கில் பணம் போடுதல், எடுத்தல், மணியார்டர் அனுப்புதல் உள்ளிட்ட படிவங்களில், தமிழ் மொழி நீக்கப்பட்டது குறித்து, மதுரை தொகுதி எம்.பி.,
 தமிழில் அஞ்சலக படிவங்கள் எம்.பி.,யிடம் அதிகாரிகள் உறுதி

சென்னை : ''ஒரு மாதத்திற்குள், தமிழகம் முழுதும் உள்ள அஞ்சலகங்களுக்கு, தமிழில் அச்சடித்த படிவங்கள் வழங்கப்படும் என, தமிழக அஞ்சல்துறை தலைவர் உறுதி அளித்துள்ளார்,'' என, மதுரை தொகுதி எம்.பி., வெங்கடேசன் தெரிவித்தார்.
அஞ்சலக சேமிப்பு கணக்கில் பணம் போடுதல், எடுத்தல், மணியார்டர் அனுப்புதல் உள்ளிட்ட படிவங்களில், தமிழ் மொழி நீக்கப்பட்டது குறித்து, மதுரை தொகுதி எம்.பி., வெங்கடேசன், மத்திய அரசுக்கும், தமிழ்நாடு வட்ட தலைமை அஞ்சல்துறை தலைவருக்கும், கடிதம் எழுதி இருந்தார்.இந்நிலையில், தமிழக அஞ்சல்துறை தலைவர் செல்வகுமாரை நேற்று, சென்னை, தலைமை அஞ்சலகத்தில், வெங்கடேசன் சந்தித்துப் பேசினார்.

பின், பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறியதாவது:

அஞ்சல சேமிப்பு கணக்கு படிவங்கள், மணியார்டர் உள்ளிட்டவற்றில் இடம் பெற்றிருந்த தமிழ் மொழி நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஆங்கிலமும், ஹிந்தியும் இடம் பெற்றிருந்தன.இதனால், பாமர மக்கள் அந்தப் படிவங்களை படித்துப் பார்த்து, பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். இது தொடர்பாக, மத்திய அரசுக்கும், அஞ்சல்துறை அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதினேன்.

அதற்கு, தமிழகம் முழுதும் உள்ள 14 ஆயிரம் அஞ்சலகங்களில், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் படிவங்கள் தமிழில் அச்சடித்து வழங்கப்படும்.மேலும், 40 படிவங்கள், ஒரு மாதத்துக்குள் தமிழில் அச்சடித்து வழங்கப்படும் என, தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை தலைமை அதிகாரி எழுத்துப் பூர்வமாக, தற்போது உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு வெங்கடேசன் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X