ஆன்லைன் கட்டட அனுமதி: புதிய விதிமுறைகள் வெளியீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன்' கட்டட அனுமதி: புதிய விதிமுறைகள் வெளியீடு

Added : அக் 07, 2021
Share
சென்னை : 'ஆன்லைன்' முறையில் கட்டுமான திட்ட அனுமதி வழங்குவதற்கான புதிய விதிமுறைகளை, நகராட்சி நிர்வாகத் துறை பிறப்பித்துள்ளது.தமிழகத்தில், 2019 பிப்., 4ல், பொது கட்டட விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதன் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 10 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டுமான திட்ட அனுமதி வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக, நகராட்சி நிர்வாகத் துறை


சென்னை : 'ஆன்லைன்' முறையில் கட்டுமான திட்ட அனுமதி வழங்குவதற்கான புதிய விதிமுறைகளை, நகராட்சி நிர்வாகத் துறை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில், 2019 பிப்., 4ல், பொது கட்டட விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதன் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 10 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டுமான திட்ட அனுமதி வழங்க அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக, நகராட்சி நிர்வாகத் துறை பிறப்பித்துள்ள சுற்றறிக்கை:

மாநகராட்சிகள், சில நகராட்சிகளில் மட்டுமே ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. இந்நிலையில், அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும், ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பெறுதல், கட்டண வசூல் பணிக்கான புதிய இணையதளங்கள் ஏற்படுத்தப்பட்டுஉள்ளன.இதன்படி, கட்டட அனுமதி விண்ணப்பங்களை, tnurbanepay.tn.gov.in என்ற இணையதளத்தில் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன் இணைப்பாக அளிக்க வேண்டிய ஆவணங்களை, பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில், தொழில் சார்ந்த வல்லுனர் வாயிலாக, இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.மனுதாரர்கள், ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள், tnurbaneseva.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக, சம்பந்தப்பட்ட நகரமைப்பு ஆய்வாளர், பொறியாளர் பணி பட்டியலில் சேர்க்கப்படும்.

இதையடுத்து, பொது கட்டட விதிகள் அடிப்படையில், வரைபடம் உள்ளதா என்பதை, மூன்று நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முடிவு செய்ய வேண்டும். இந்த முடிவு விபரங்கள், விண்ணப்பதாரருக்கு தெரிவிக்கப்படும்.மேலும், 1,200 சதுர அடி வரையிலான, சிறிய குடியிருப்பு கட்டடங்களுக்கு, கள ஆய்வு இன்றி, 10 நாட்களுக்குள் ஒப்புதல் வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்கான விண்ணப்ப படிவ மாதிரிகளும், உள்ளாட்சிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X