மாநகராட்சி 10 ஆண்டு வரவு-செலவு தகவல் சேகரிக்கிறது தமிழக அரசு| Dinamalar

மாநகராட்சி 10 ஆண்டு வரவு-செலவு தகவல் சேகரிக்கிறது தமிழக அரசு

Added : அக் 07, 2021
Share
கோவை : கோவை மாநகராட்சியின் வங்கி கணக்கு விபரங்கள், மத்திய - மாநில அரசுகள் வழங்கிய தொகை, கடந்த, 10 ஆண்டுகளில் செய்த பணிகள், செலவழித்த தொகை உள்ளிட்ட விபரங்களை, தமிழக அரசு சேகரித்து வருகிறது.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், உள்ளாட்சி அமைப்புகளில் டெண்டர் முறைகேடு, ஊழல் நடந்திருப்பதாக எழுந்த புகார் மீதான விசாரணை துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடந்து

கோவை : கோவை மாநகராட்சியின் வங்கி கணக்கு விபரங்கள், மத்திய - மாநில அரசுகள் வழங்கிய தொகை, கடந்த, 10 ஆண்டுகளில் செய்த பணிகள், செலவழித்த தொகை உள்ளிட்ட விபரங்களை, தமிழக அரசு சேகரித்து வருகிறது.

கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், உள்ளாட்சி அமைப்புகளில் டெண்டர் முறைகேடு, ஊழல் நடந்திருப்பதாக எழுந்த புகார் மீதான விசாரணை துரிதப்படுத்தப்பட்டு உள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடந்து வரும் சூழலில், நிதி செலவினங்கள் தொடர்பான தகவல் திரட்டும் வேலையில் தமிழக அரசு இறங்கியிருக்கிறது.

அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இரு விதமான படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.வங்கிகளில் உள்ள கணக்கு விபரங்கள், 10 ஆண்டுகளில் செலவழித்த வரவு - செலவு விபரம், இதுவரை செய்த பணிகளின் பட்டியல் உள்ளிட்ட தகவல்கள் கோரப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சி பெயரில், 30 வங்கிகளில் கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன. அவ்விபரம், மத்திய - மாநில அரசுகளிடம் இருந்து என்னென்ன தலைப்புகளில், எந்தெந்த திட்டங்களுக்கு நிதி பெறப்பட்டது; அதை செலவழித்த விதம், இதுவரை செய்த வேலைகள் பட்டியல் உள்ளிட்ட தகவல்களை, தமிழக அரசு பெற்றுள்ளது.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'தகவல்களை சேகரித்து அனுப்பி வருகிறோம். தினமும் வெவ்வேறு தலைப்புகளில் தகவல் கேட்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கான தகவல் கேட்பதால், சிரமமாக இருக்கிறது' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X