வங்கி கணக்கில் ரூ.65,000 மோசடி சைபர் க்ரைம் போலீசார் விசாரணை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கி கணக்கில் ரூ.65,000 மோசடி 'சைபர் க்ரைம்' போலீசார் விசாரணை

Added : அக் 07, 2021
Share
கோவை : கல்லுாரி ஆசிரியை வங்கி கணக்கில், 65 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.கோவை, காரமடையை சேர்ந்த தனியார் கல்லுாரி ஆசிரியையின் மொபைல்போன் எண்ணுக்கு சில நாட்களுக்கு முன் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதிலிருந்த இணையதள முகவரியை பார்த்தபோது அவர் பயன்படுத்தும் வங்கியின் பக்கம் வந்தது.அதில், வங்கி கணக்கு விபரங்கள்

கோவை : கல்லுாரி ஆசிரியை வங்கி கணக்கில், 65 ஆயிரம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது குறித்து மாவட்ட சைபர் க்ரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை, காரமடையை சேர்ந்த தனியார் கல்லுாரி ஆசிரியையின் மொபைல்போன் எண்ணுக்கு சில நாட்களுக்கு முன் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதிலிருந்த இணையதள முகவரியை பார்த்தபோது அவர் பயன்படுத்தும் வங்கியின் பக்கம் வந்தது.அதில், வங்கி கணக்கு விபரங்கள் பதிவு செய்யப்படாமல் உள்ளதால், கீழே தரப்பட்ட லிங்கை அழுத்த அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து அவரது வங்கி கணக்கு விபரங்களை பதிவு செய்ததும், கணக்கில் இருந்து மூன்று தவணைகளாக, 65 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.இது குறித்து மாவட்ட சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X