ஜம்முவில் அரசுப் பள்ளியில் பயங்கரவாதிகள் அட்டூழியம்; 2 ஆசிரியர்கள் சுட்டுக்கொலை

Updated : அக் 07, 2021 | Added : அக் 07, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் உள்ள அரசுப் பள்ளியில் இன்று (அக்.,07) காலை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இரண்டு ஆசிரியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே இட்கா சங்கம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் இன்று காலை ஆசிரியர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
Terrorist Attack, JK, Government School, 2 Teachers, Killed, பயங்கரவாதிகள், தாக்குதல், சுட்டுக்கொலை, துப்பாக்கிச்சூடு, ஜம்மு, காஷ்மீர், அரசுப்பள்ளி, ஆசிரியர்கள், கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் உள்ள அரசுப் பள்ளியில் இன்று (அக்.,07) காலை நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இரண்டு ஆசிரியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் அருகே இட்கா சங்கம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் இன்று காலை ஆசிரியர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது பள்ளிக்குள் புகுந்த இரண்டு பயங்கரவாதிகள், தலைமை ஆசிரியர் சுக்விந்தர் கவுர் மற்றும் ஆசிரியர் தீபக் ஆகியோரை அறைக்கு வெளியே அழைத்து வந்துள்ளனர். அதன்பிறகு திடீரென ஆசிரியர்கள் இருவரையும் துப்பாக்கியால் சுட்ட பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பியோடினர்.


latest tamil news


பலத்த காயமடைந்த இரு ஆசிரியர்களையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நேற்று மாலையில் சில மணிநேர இடைவெளியில் ஸ்ரீநகர் மற்றும் பந்திபூராவில் அடுத்தடுத்து 3 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது. கடந்த இரு நாட்களில் 5 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றதால் பதற்றம் நிலவுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r ravichandran - chennai,இந்தியா
07-அக்-202121:02:12 IST Report Abuse
r ravichandran இதற்கெல்லாம் பிரியங்கா, ராகுல் காந்தி போய் போராட்டம் நடத்த மாட்டார்கள்
Rate this:
Cancel
BALU - HOSUR,இந்தியா
07-அக்-202119:33:51 IST Report Abuse
BALU மூர்க்க மார்க்கத்தின் தீவிரவாதிகள் அந்த ஆசிரியர்களில் இஸ்லாமியர் அல்லாத பிறமதத்தைச் சார்ந்த ஆசிரியர்களைத் தேடிப் பிடித்துக் கொன்றார்கள்.இந்த உண்மையை ஊடகங்கள் மறைக்கின்றன.
Rate this:
Cancel
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
07-அக்-202118:59:27 IST Report Abuse
Srivilliputtur S Ramesh இந்த நிகழ்ச்சிக்கு "பாப்பு" இரங்கல் சொல்ல மாட்டாரு. கண்டிக்க மாட்டாரு.. எங்க வோட்டு கிடைக்குதோ, அங்க ஓடுவாரு .ஒட்டு மொத்தமா எல்லா காஷ்மீர் தீவிரவாதிகளையும் ராணுவத்தை அனுப்பி போட்டுத்தள்ளிட வேண்டியதுதான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X