பொது செய்தி

தமிழ்நாடு

90 அணைகளில் 130 டி.எம்.சி., நீர்

Added : அக் 07, 2021
Share
Advertisement
சென்னை : பல மாவட்டங்களில் மழை கொட்டி வருவதால், 90 அணைகளில் நீர் இருப்பு 130 டி.எம்.சி.,யாக அதிகரித்துள்ளது.நீர்வளத் துறை பராமரிப்பில் மாநிலம் முழுதும் 90 அணைகள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி., ஆகும். மேட்டூர், முல்லைப் பெரியாறு, பவானிசாகர், பரம்பிக்குளம் உள்ளிட்ட 15 அணைகள் அதிக கொள்ளளவு கொண்டவை.ஜூன் முதல் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால், அணைகளுக்கு

சென்னை : பல மாவட்டங்களில் மழை கொட்டி வருவதால், 90 அணைகளில் நீர் இருப்பு 130 டி.எம்.சி.,யாக அதிகரித்துள்ளது.
நீர்வளத் துறை பராமரிப்பில் மாநிலம் முழுதும் 90 அணைகள் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி., ஆகும். மேட்டூர், முல்லைப் பெரியாறு, பவானிசாகர், பரம்பிக்குளம் உள்ளிட்ட 15 அணைகள் அதிக கொள்ளளவு கொண்டவை.ஜூன் முதல் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால், அணைகளுக்கு நீர்வரத்து கிடைத்து வருகிறது.

நேற்று காலை நிலவரப்படி, அதிகபட்சமாக, பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3,273 கன அடி; முல்லைப் பெரியாறு அணைக்கு 2,184; வைகை 1,477; பேச்சிப்பாறை 3,356; பெருஞ்சாணி 1,486; பரம்பிக்குளம் 1,369 கன அடி நீர்வரத்து கிடைத்தது.இதனால், 90 அணைகளில் நீர் கையிருப்பு 130 டி.எம்.சி.,யாக உயர்ந்துள்ளது. அணைகள் ஒட்டுமொத்தமாக 58.4 சதவீதம் அளவிற்கு நிரம்பியுள்ளன. பல அணைகளில் இருந்து, பாசன தேவைக்காக நீர் திறக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X