பொது செய்தி

தமிழ்நாடு

58 டாஸ்மாக் கடைக்கு மூன்று நாள் விடுமுறை

Added : அக் 07, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நடக்க உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, 58 டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், இரண்டாம் கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும், 9ல் நடக்கிறது. மொத்தம், 20 பதவிகளுக்கு, 65 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் நடக்கும் இடத்தில் இருந்து, ஐந்து கி.மீ., சுற்றளவுக்கு உள்ள டாஸ்மாக் கடைகளை மூட, தேர்தல் ஆணையம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நடக்க உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, 58 டாஸ்மாக் கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில், இரண்டாம் கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும், 9ல் நடக்கிறது. மொத்தம், 20 பதவிகளுக்கு, 65 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் நடக்கும் இடத்தில் இருந்து, ஐந்து கி.மீ., சுற்றளவுக்கு உள்ள டாஸ்மாக் கடைகளை மூட, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஈரோடு மாவட்ட அளவில், 58 டாஸ்மாக் கடைகள், குறிப்பிட்ட இடங்களில் உள்ள பார்கள், இன்று காலை, 10:00 முதல், 9 நள்ளிரவு வரை மூட மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஓட்டு எண்ணிக்கை நடக்கும், 12ல் மாவட்டத்தில் உள்ள, 77 டாஸ்மாக் கடைகள் மூடப்படும். ஈரோடு மாநகர பகுதியில் மூலப்பாளையம், கொல்லம்பாளையம், ரயில் நிலையம் எதிரில் உள்ள நான்கு கடைகள், சென்னிமலை சாலை, சூரம்பட்டிவலசு, ஜெகநாதபுரம் காலனி, சூரம்பட்டி நால் ரோடு, குமலன்குட்டை, ஜி.எச்., கார்னர், சம்பத் நகர், சூளை, பஸ் ஸ்டாண்ட் சுற்றி உள்ள கடைகள், வ.உ.சி., பூங்கா, மூலப்பட்டறை, பி.எஸ்.பார்க் பகுதியில் உள்ள கடைகள் குறிப்பிட்ட நாளில் மூடப்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X