சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மெடிக்கல் ஊழியரிடம் அரிவாளை காட்டி துாக்க மாத்திரை பறித்த இளைஞர்கள் கைது

Added : அக் 07, 2021
Share
Advertisement
பட்டுக்கோட்டை : போதைக்காக மெடிக்கல்லில் பெண் ஊழியரிடம் அரிவாளை காட்டி மிரட்டி, துாக்க மாத்திரைகளை பறித்து சென்ற, 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையுடன் இணைந்து செயல்படும் மெடிக்கல் ஷாப்பில், கடந்த, 4ம் தேதி இரவு, 11:30 மணிக்கு வந்த இரண்டு இளைஞர்கள், மருந்துச் சீட்டு இல்லாமல், மெடிக்கலில் பணியாற்றும் பெண் ஊழியரிடம்

பட்டுக்கோட்டை : போதைக்காக மெடிக்கல்லில் பெண் ஊழியரிடம் அரிவாளை காட்டி மிரட்டி, துாக்க மாத்திரைகளை பறித்து சென்ற, 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையுடன் இணைந்து செயல்படும் மெடிக்கல் ஷாப்பில், கடந்த, 4ம் தேதி இரவு, 11:30 மணிக்கு வந்த இரண்டு இளைஞர்கள், மருந்துச் சீட்டு இல்லாமல், மெடிக்கலில் பணியாற்றும் பெண் ஊழியரிடம் துாக்கமாத்திரை கேட்டுள்ளனர். அப்போது, மருந்துச் சீட்டு இல்லாமல் மாத்திரையை தர முடியாது என ஊழியர் கூறியுள்ளார்.

இதையடுத்து, ஒரு இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை காட்டி மிரட்டி, மாத்திரைகளை பறித்துக்கொண்டு, இருவரும் தப்பியோடினர். மருத்துவமனை நிர்வாகத்தினர் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். தப்பியோடிய இருவரும், மகாராஜா சமுத்திரம் பகுதியில், பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், நேற்று முன்தினம் அங்கு சென்ற போலீசார், இருவரையும் பிடிக்க முயன்ற போது, இருவரும் பாலத்தில் இருந்து குதித்து தப்பியோட முயன்றனர். இதில், பண்ணவயல் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரன்,20, வலது கை முறிந்தும், பட்டுக்கோட்டை தச்சுத் தெருவைச் சேர்ந்த ராஜேஷ்,19,. வலது கால் உடைந்தும் போலீசாரிடம் சிக்கினர். இருவரையும் கைது செய்து விசாரித்ததில், துாக்க மாத்திரையை போதைக்காக பயன்படுத்துவதாக தெரியவந்தது. இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X