பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
அந்தியூர்: அந்தியூர் அரசு மருத்துவமனையில், இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளை பற்றி ஆய்வு மேற்கொண்டார். இது குறித்த நிகழ்வு யுடியூப் சேனல் ஒன்றில் வெளியானது. அதில், அந்தியூர் அரசு மருத்துவமனையில், சமூகவிரோதிகளால் சில சமுக விரோத செயல்கள் நடப்பதாகவும், அதில் ஈடுபட்டவர்களை போலீசார்

அந்தியூர்: அந்தியூர் அரசு மருத்துவமனையில், இரண்டு நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளை பற்றி ஆய்வு மேற்கொண்டார். இது குறித்த நிகழ்வு யுடியூப் சேனல் ஒன்றில் வெளியானது. அதில், அந்தியூர் அரசு மருத்துவமனையில், சமூகவிரோதிகளால் சில சமுக விரோத செயல்கள் நடப்பதாகவும், அதில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர் என, பொய்யாக ஒரு வீடியோவை பதிவு செய்து, யூடியூப் சேனலில் வெளியிட்டு இருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்தியூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கவிதா தலைமையில், மருத்துவர்கள், ஊழியர்கள் நேற்று காலை தங்கள் பணியை புறக்கணித்து மருத்துவமனை வெளிப்புறத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் மற்றும் போலீசார் மருத்துவர்கள், ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அந்தியூர் அரசு மருத்துவமனை பற்றி அவதூறு பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அவர்களை கைது செய்ய வேண்டும் என கூறினர். அதற்கு போலீசார், 'இது பற்றி சைபர் கிரைமிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறியதையடுத்து மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு பணிக்கு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X