பொது செய்தி

தமிழ்நாடு

கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் மனு

Added : அக் 07, 2021
Share
Advertisement
ஈரோடு: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட, 60 வார்டுகளிலும் பொது சுகாதார பணியில்,1,700 பேர் பணிபுரிகின்றனர். இதில், 1,200 பேர் நிரந்தரம் இல்லாமல் தினக்கூலி அடிப்படையில் பணி புரிகின்றனர். இந்நிலையில், ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதார பணியை ஒப்பந்த முறையில் தனியாரிடம்

ஈரோடு: பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளித்தனர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட, 60 வார்டுகளிலும் பொது சுகாதார பணியில்,1,700 பேர் பணிபுரிகின்றனர். இதில், 1,200 பேர் நிரந்தரம் இல்லாமல் தினக்கூலி அடிப்படையில் பணி புரிகின்றனர். இந்நிலையில், ஈரோடு மாநகராட்சியில் பொது சுகாதார பணியை ஒப்பந்த முறையில் தனியாரிடம் கொடுக்கக் கூடாது. தற்காலிகமாக தூய்மை பணியாளர்கள், ஓட்டுனர்கள் என அனைத்து பிரிவுகளில் உள்ள தொழிலாளர்களை, 480 நாட்கள் பணிபுரிந்தால் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலியான பணியிடங்களில் ஆட்களை நியமிக்க வேண்டும். தினக்கூலி அடிப்படையில் தொழிலாளர்களுக்கு அரசாணை உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, 17 ரூபாய் சேர்த்து ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஈரோடு மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத் தலைவர் சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் மாணிக்கம் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து, மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X