சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அட்டை பெட்டி லோடு லாரி கவிழ்ந்து விபத்து

Added : அக் 07, 2021
Share
Advertisement
பு.புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அடுத்த, புங்கம்பள்ளி குளக்கரையோர வளைவில் அட்டை பெட்டி பாரம் ஏற்றி வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. கோவையில் இருந்து, சத்தியமங்கலம் நோக்கி அட்டை பெட்டிகள் பாரம் ஏற்றிக்கொண்டு, லாரி புறப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு புன்செய்புளியம்பட்டி அடுத்துள்ள புங்கம்பள்ளி குளம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் லாரி வந்து

பு.புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அடுத்த, புங்கம்பள்ளி குளக்கரையோர வளைவில் அட்டை பெட்டி பாரம் ஏற்றி வந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. கோவையில் இருந்து, சத்தியமங்கலம் நோக்கி அட்டை பெட்டிகள் பாரம் ஏற்றிக்கொண்டு, லாரி புறப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு புன்செய்புளியம்பட்டி அடுத்துள்ள புங்கம்பள்ளி குளம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது, அங்குள்ள வளைவில் திரும்பியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தடுப்பு கல் மீது மோதி, சாலையோரத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. டிரைவர் காயத்துடன் உயிர் தப்பினார். லாரியில் இருந்த அட்டை பெட்டிகள் குளத்துக்குள் சரிந்து விழுந்தன. கிராம மக்கள், வாகன ஓட்டிகள், லாரி டிரைவரை மீட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாலையோரம் லாரி கவிழ்ந்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. கிரேன் வரவழைக்கப்பட்டு லாரி மீட்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X