சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
நாகப்பட்டினம் : கேரளா மாநிலம் கொச்சின் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு கடலில் மூழ்கி, அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் உயிர் தப்பினர். தமிழக அரசு தலையிட்டு மூழ்கிய படகை மீட்டு, மீனவ குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை மீட்டுத்தர வேண்டும் என நாகை அடுத்த நாகூர் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நாகை அடுத்த நாகூர் மீனவ கிராமத்தைச்
 நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம்

நாகப்பட்டினம் : கேரளா மாநிலம் கொச்சின் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற விசைப்படகு கடலில் மூழ்கி, அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் உயிர் தப்பினர். தமிழக அரசு தலையிட்டு மூழ்கிய படகை மீட்டு, மீனவ குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தை மீட்டுத்தர வேண்டும் என நாகை அடுத்த நாகூர் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாகை அடுத்த நாகூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன்,51, இவரது விசைப்படகில், 11 மீனவர்கள், கேரள மாநிலம் கொச்சின் துறைமுகத்தில் இருந்து கடந்த 30 ம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது படகு கடலில் மூழ்கியது. கடலில் தத்தளித்த மீனவர்களை அவ்வழியே வந்த மற்ற மீனவர்கள் மீட்டு கரை சேர்த்தனர். இருப்பினும் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான படகை மீட்க முடியாமல் கரை சேர்ந்த மீனவர்கள் தவித்து வருகின்றனர்.

இது குறித்து நாகூர் மீனவர்கள், கலெக்டர் மற்றும் மீன்வளத் துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்டும் நடவடிக்கை இல்லை. தமிழக அரசு தலையிட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டுத்தர வேண்டும் என நாகூர் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால நாகூர் மீன் பிடித்துறைமுகத்தில் 250க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X