ஐந்து மாதங்களுக்கு பிறகு கொலை குற்றவாளி கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐந்து மாதங்களுக்கு பிறகு கொலை குற்றவாளி கைது

Added : அக் 07, 2021
Share
அந்தியூர்: ஆப்பக்கூடல் அருகே, ஒரிச்சேரிப்புதூர் பவானி ஆற்றில் கடந்த மே, 15ல், அடையாளம் தெரியாத சடலம் மிதந்து வந்தது. ஆப்பக்கூடல் போலீசார் இறந்தவரின் உடலை, உடற்கூறு ஆய்விற்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணையில், கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்த நாகராஜன், 45, என்பதும் இதே பகுதியில் பூக்கடை வைத்து வியாபாரம்

அந்தியூர்: ஆப்பக்கூடல் அருகே, ஒரிச்சேரிப்புதூர் பவானி ஆற்றில் கடந்த மே, 15ல், அடையாளம் தெரியாத சடலம் மிதந்து வந்தது. ஆப்பக்கூடல் போலீசார் இறந்தவரின் உடலை, உடற்கூறு ஆய்விற்காக பவானி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணையில், கவுந்தப்பாடி அருகே உள்ள பி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்த நாகராஜன், 45, என்பதும் இதே பகுதியில் பூக்கடை வைத்து வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. இவருக்கு மனைவி உட்பட ஒரு மகன் உள்ளனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார், கொலையாளியை தேடி வந்தனர், இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை, போலீசாருக்கு கிடைத்த தகவல்படி நாகராஜனை கொலை செய்தது ஆப்பக்கூடல், சக்தி நகரை சேர்ந்த கட்டட தொழிலாளி சண்முகம், 50, என தெரியவந்தது. ஆப்பக்கூடலில் போலீசார் சண்முகத்தை கைது செய்த பின் கூறியதாவது: நாகராஜன் உடல் மீட்கப்பட்ட முன்தினம் இரவு சண்முகம், நாகராஜன் ஆகிய இருவரும் ஆப்பக்கூடல் ஆற்றங்கரைக்கு வந்துள்ளனர். அப்போது நாகராஜன், சண்முகத்திடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால், ஆத்திரமடைந்த சண்முகம் பெரிய கல்லை எடுத்து நாகராஜனின் தலை, முகம், கழுத்து ஆகிய இடங்களில் பலமாக அடித்ததில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். பின்னர் அவரை ஆற்றில் தூக்கிபோட்டு சண்முகம் தப்பிச்சென்றதாக தெரிவித்தார். இவ்வாறு அவர்கள் கூறினர். சண்முகத்தை போலீசார் கைது செய்து, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X