பொது செய்தி

தமிழ்நாடு

ஒவ்வொரு வாக்காளருக்கும் கையுறை; உள்ளாட்சியில் ஓட்டுப்போட ஏற்பாடு

Added : அக் 07, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்ட, ஊரக உள்ளாட்சியில், 24 பதவிக்கு, 91 பேர் போட்டியிடுகின்றனர். அதற்கான ஓட்டுப்பதிவு, 195 ஓட்டுச்சாவடிகளில், வரும், 9ல் நடக்க உள்ளது. ஓட்டுப்போடும் வாக்காளர் மொத்த எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 23 ஆயிரத்து, 145 பேர். அவர்களில், சாதாரண வாக்காளர், காலை, 7:00 முதல், மாலை, 5:00 மணி வரையும், தொற்றுக்கு ஆளானவர், மாலை, 5:00 முதல், 6:00 மணி வரை ஓட்டுப்போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோய் பரவல்

சேலம்: சேலம் மாவட்ட, ஊரக உள்ளாட்சியில், 24 பதவிக்கு, 91 பேர் போட்டியிடுகின்றனர். அதற்கான ஓட்டுப்பதிவு, 195 ஓட்டுச்சாவடிகளில், வரும், 9ல் நடக்க உள்ளது. ஓட்டுப்போடும் வாக்காளர் மொத்த எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 23 ஆயிரத்து, 145 பேர். அவர்களில், சாதாரண வாக்காளர், காலை, 7:00 முதல், மாலை, 5:00 மணி வரையும், தொற்றுக்கு ஆளானவர், மாலை, 5:00 முதல், 6:00 மணி வரை ஓட்டுப்போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நோய் பரவல் தடுக்க, சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு வாக்காளரும், பாலிதீன் கையுறை அணிந்து, ஓட்டுப்போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, கிருமிநாசினி, பேஸ்ஷீல்டு, ரப்பர் கையுறை, வாக்காளருக்கு வழங்க முக கவசம், கையுறை, கிருமிநாசினி, பி.பி.இ.கிட் உள்பட, 11 வகை பொருட்கள் அடங்கிய, தலா, 195 பெட்டி, ஓட்டுச்சாவடி எண்ணிக்கை அளவில், தனித்தனியே தயார் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும், தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகமான, 12 ஒன்றியத்துக்கு, இன்று அனுப்பப்படும் என, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

டாஸ்மாக் கடை மூட உத்தரவு: சேலம் மாவட்டத்தில், வரும், 9ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. அதனால், தேர்தல் நடக்கும் பகுதியில் இருந்து, 5 கி.மீ., சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகளை, அக்., 7(இன்று) முதல், 9 வரை, காலை, 10:00 முதல், நள்ளிரவு, 12:00 மணி வரை மூடப்படுகிறது. அதன்படி, எம்.செட்டிப்பட்டி, வீராணம், நீர்முள்ளிக்குட்டை, புத்தூர், சிக்கனம்பட்டி, சேலத்தாம்பட்டி, வெள்ளார், தாதாபுரம், நவப்பட்டி, காட்டுக்கோட்டை, புளியம்பட்டி உள்ளிட்ட, 40 டாஸ்மாக் கடைகளை மூட, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ராஜா உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X