பொது செய்தி

தமிழ்நாடு

ஜவ்வரிசியில் கலப்படம்; நடவடிக்கை அவசியம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
சேலம்: ஜவ்வரிசியில் கலப்படம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, சேலத்தில், தமிழ்நாடு விவசாய சங்க கூட்டமைப்பு செயலர் நல்லசாமி, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில், 300க்கும் மேற்பட்ட ஜவ்வரிசி ஆலைகள் உள்ளன. கிழங்கு தோலில், 'சயனைடு' எனும் விஷம் கணிசமாக உள்ளது. இத்தோலை சீவி எடுத்த பின்

சேலம்: ஜவ்வரிசியில் கலப்படம் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து, சேலத்தில், தமிழ்நாடு விவசாய சங்க கூட்டமைப்பு செயலர் நல்லசாமி, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி மாவட்டங்களில், 300க்கும் மேற்பட்ட ஜவ்வரிசி ஆலைகள் உள்ளன. கிழங்கு தோலில், 'சயனைடு' எனும் விஷம் கணிசமாக உள்ளது. இத்தோலை சீவி எடுத்த பின் கிடைக்கும் கிழங்கை அரைத்து ஜவ்வரிசி செய்து வருவது நடைமுறையில் இருந்தது. காலப்போக்கில் தோலை சீவி எடுக்க ஆள் கிடைக்காததோடு, கூடுதல் செலவு என்பதால், அப்படியே அரைப்பது நடைமுறைக்கு வந்தது. வெள்ளை நிறம் வேண்டும் என்பதற்காக, துணி வெளுக்கப்பயன்படுத்தும் சோடியம் ஹைப்போ குளோரைட், கால்சியம் ஹைப்போ குளோரைட் போன்ற ரசாயனப் பொருட்கள் கலக்கப்பட்டன. கந்தக அமிலமும் சேர்க்கப்பட்டது. இதனால் நுகர்வோர் உடல்நலம் கேள்விக்குறியானது. மக்காச்சோள மாவு விலை குறைவாக உள்ளதால், அதையும் மரவள்ளியுடன் கலப்பது உண்டு. இதனால், ஒரு மூட்டைக்கு, 1,000 ரூபாய் வரை லாபம் பார்த்துவிடுகின்றனர். பாதிக்கப்படுவோர் அப்பாவி விவசாயிகள், நுகர்வோர் மட்டுமே. அதனால், கலப்படம் செய்வோர் மீது சேகோசர்வ், அரசு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 2021க்குள், 'கள்' தடையை நீக்கி, அரசு அறிவிக்க வேண்டும். இல்லையெனில், 2022 ஜனவரியில், 'கள்' விடுதலை மாநாடு திட்டமிட்டபடி, ஈரோட்டில் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X