பொது செய்தி

தமிழ்நாடு

சாலை அமைக்கும் பணி: களத்தில் இறங்கிய கமிஷனர்

Added : அக் 07, 2021
Share
Advertisement
சேலம்: நமது நாளிதழ் செய்தியால், சேர்மன் ராமலிங்கம் தெருவில், சாலை அமைக்கும் பணி உடனே மேற்கொள்ளப்பட்டு, கமிஷனர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். சேலம், அம்மாபேட்டை மண்டலம், 42வது வார்டு, சேர்மன் ராமலிங்கம் தெருவில், சாக்கடை நீர் தேங்கியிருப்பதால், மக்கள் நடக்க கூட வழியின்றி தவித்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில், நேற்று, படத்துடன் செய்தி வெளியானது. இதனால், அங்கு ஆய்வு செய்த

சேலம்: நமது நாளிதழ் செய்தியால், சேர்மன் ராமலிங்கம் தெருவில், சாலை அமைக்கும் பணி உடனே மேற்கொள்ளப்பட்டு, கமிஷனர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். சேலம், அம்மாபேட்டை மண்டலம், 42வது வார்டு, சேர்மன் ராமலிங்கம் தெருவில், சாக்கடை நீர் தேங்கியிருப்பதால், மக்கள் நடக்க கூட வழியின்றி தவித்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில், நேற்று, படத்துடன் செய்தி வெளியானது. இதனால், அங்கு ஆய்வு செய்த கமிஷனர் கிறிஸ்துராஜ், உடனே சாலை அமைக்க உத்தரவிட்டார். முதல்கட்டமாக ஜல்லி கலந்து கிரஷர் மண் கொட்டப்பட்டு வருகிறது. இவற்றை, நேற்று மாலை ஆய்வு செய்த கமிஷனர், இரு நாளில் சாலை அமைக்கும் பணியை முடிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, நாராயண நகர் சந்திப்பில் நடந்து வரும் சாக்கடை பாலம் கட்டுமானப் பணியையும் பார்வையிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X