பொது செய்தி

தமிழ்நாடு

பணி வழங்க மறுப்பு: சுங்கச்சாவடி மீது புகார்

Added : அக் 07, 2021
Share
Advertisement
சேலம்: தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர் கூட்டமைப்பின் மாநில துணை பொதுச்செயலர் பாலமுருகன் தலைமையில் நிர்வாகிகள், நேற்று, சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவிடம் அளித்த மனு: சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், மேட்டுப்பட்டி, நத்தக்கரை, வீரசோழபுரம் ஆகிய சுங்கச்சாவடிகளில், 300க்கும் மேற்பட்டோர், தொடர்ந்து, 10 ஆண்டாக பணிபுரிகின்றனர். தொழிலாளர் கோரிக்கையை நிறைவேற்றுவது

சேலம்: தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர் கூட்டமைப்பின் மாநில துணை பொதுச்செயலர் பாலமுருகன் தலைமையில் நிர்வாகிகள், நேற்று, சேலம் எஸ்.பி., ஸ்ரீஅபிநவிடம் அளித்த மனு: சேலம் - உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், மேட்டுப்பட்டி, நத்தக்கரை, வீரசோழபுரம் ஆகிய சுங்கச்சாவடிகளில், 300க்கும் மேற்பட்டோர், தொடர்ந்து, 10 ஆண்டாக பணிபுரிகின்றனர். தொழிலாளர் கோரிக்கையை நிறைவேற்றுவது தொடர்பாக, புகார் மீதான விசாரணை, மத்திய மண்டல தொழிலாளர் கமிஷனர் விசாரணையில் உள்ளது. இந்த சுங்கச்சாவடிகளை நிர்வகித்த, 'எஸ்.யு., டோல் ரோடு' நிறுவனம், ஏற்கனவே பணிபுரிந்த துணை ஒப்பந்ததாரர்களை சட்ட விரோதமாக நீக்கி, புது ஒப்பந்ததாரர் பெயரில், தொழிலாளர்களுக்கு பணி வழங்க மறுத்து வருகின்றனர். கடந்த, 1ல் நடந்த பேச்சில், அக்., 6ல் பணியாளர்களை பணியில் சேர்த்துக்கொள்ள சுங்கச்சாவடி நிறுவனம் சம்மதம் தெரிவித்து கடிதம் கொடுத்தது. இன்று(நேற்று) பணிக்கு சென்றபோது, தொழிலாளர்களுக்கு பணி வழங்க மறுத்துவிட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் சூழல் உள்ளதால், போலீசார் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X