பொது செய்தி

தமிழ்நாடு

'அடாவடி' செய்த நிதி நிறுவன ஊழியர் 3 பேர் மீது வழக்கு

Added : அக் 07, 2021
Share
Advertisement
வாழப்பாடி: வாழப்பாடி, வெள்ளாளகுண்டம், முருகன் கோவில் தெருவை சேர்ந்த விவசாயி அருண், 32. இவர், பேளூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பைக்கை அடகு வைத்து, 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். கொரோனா காலத்தில் இரு மாத தவணை செலுத்தவில்லை. இதனால், கடந்த, 4ல் அருண் வீட்டுக்கு வந்த நிதி நிறுவன ஊழியர்கள் சந்தானம், ரமேஷ்குமார், பிரதாப் ஆகியோர், அத்தொகையை செலுத்த அறிவுறுத்தினர். அதில்,

வாழப்பாடி: வாழப்பாடி, வெள்ளாளகுண்டம், முருகன் கோவில் தெருவை சேர்ந்த விவசாயி அருண், 32. இவர், பேளூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பைக்கை அடகு வைத்து, 30 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினார். கொரோனா காலத்தில் இரு மாத தவணை செலுத்தவில்லை. இதனால், கடந்த, 4ல் அருண் வீட்டுக்கு வந்த நிதி நிறுவன ஊழியர்கள் சந்தானம், ரமேஷ்குமார், பிரதாப் ஆகியோர், அத்தொகையை செலுத்த அறிவுறுத்தினர். அதில், வாக்குவாதம் முற்றியதில், நிதி நிறுவன ஊழியர்கள், அருண், அவரது மனைவி இலக்கியாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து, நேற்று முன்தினம், அருண், அவரது அண்ணன் விஜயகுமார், கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, வாழப்பாடி போலீசார் நேற்று, நிதி நிறுவன ஊழியர்கள் சந்தானம், 23, ரமேஷ்குமார், 30, பிரதாப் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X