பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடக்கம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
வாழப்பாடி: வாழப்பாடியில், கடலூர் பிரதான சாலையில் இருந்து, பிங்கள விநாயகர் கோவில் வரை, சாலையோர சிறு வியாபாரிகளின் கடைகள், கடந்த, 29ல், முதல்வர் வருகைக்கு அகற்றப்பட்டன. மீண்டும் கடை வைக்க அனுமதிக்கப்படாததால், வியாபாரிகள் கோரிக்கைப்படி, அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அப்போது, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, காய்கறி, பழக்கடை வைக்க இடம் ஒதுக்குவதாக

வாழப்பாடி: வாழப்பாடியில், கடலூர் பிரதான சாலையில் இருந்து, பிங்கள விநாயகர் கோவில் வரை, சாலையோர சிறு வியாபாரிகளின் கடைகள், கடந்த, 29ல், முதல்வர் வருகைக்கு அகற்றப்பட்டன. மீண்டும் கடை வைக்க அனுமதிக்கப்படாததால், வியாபாரிகள் கோரிக்கைப்படி, அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அப்போது, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, காய்கறி, பழக்கடை வைக்க இடம் ஒதுக்குவதாக கூறினர். அதன்படி, பழைய பஸ் ஸ்டாண்ட் நிலத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்பை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. சிலர் எதிர்ப்பு தெரிவிக்க, வாழப்பாடி போலீசார் சமாதானப்படுத்தினர். இன்று நிலத்தை முழுமையாக அளவீடு செய்து, சாலையோர சிறு வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்க, வருவாய், பேரூராட்சி உள்ளிட்ட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X