பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி கரையோரம் முன்னோர்க்கு தர்ப்பணம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
மேட்டூர்: காவிரி கரையோரம், பக்தர்கள் முன்னோர்க்கு தர்ப்பணம் செய்தனர். மகாளய அமாவாசையையொட்டி, மேட்டூர் காவிரியாற்று படித்துறையில், நேற்று காலை முதலே, வெளியூரில் இருந்து பக்தர்கள் குவியத்தொடங்கினர். பலர், பாலம் அடிவாரம் உள்ள காவிரியில் நீராடி, படித்துறையில் அமர்ந்து, முன்னோர்க்கு தர்ப்பணம் செய்தனர். அதேபோல், சேலம், சுகவனேஸ்வரர் கோவில் அருகே உள்ள கனகருத்ர மகாகணபதி,

மேட்டூர்: காவிரி கரையோரம், பக்தர்கள் முன்னோர்க்கு தர்ப்பணம் செய்தனர். மகாளய அமாவாசையையொட்டி, மேட்டூர் காவிரியாற்று படித்துறையில், நேற்று காலை முதலே, வெளியூரில் இருந்து பக்தர்கள் குவியத்தொடங்கினர். பலர், பாலம் அடிவாரம் உள்ள காவிரியில் நீராடி, படித்துறையில் அமர்ந்து, முன்னோர்க்கு தர்ப்பணம் செய்தனர். அதேபோல், சேலம், சுகவனேஸ்வரர் கோவில் அருகே உள்ள கனகருத்ர மகாகணபதி, மூக்கனேரி, அணைமேடு உள்ளிட்ட இடங்களில், முன்னோர்க்கு மக்கள் தர்ப்பணம் கொடுத்தனர். குருக்கள், ஒவ்வொருவருக்கும் மந்திர வேதம் முழங்கி, இறந்த முன்னோர் பெயரை குறிப்பிட்டு தர்ப்பணம், திதி வழங்கினர். ஏத்தாப்பூர் வசிஷ்ட நதிக்கரையையொட்டி, பிரத்யேக மேடையில், பலர், முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். அகத்திகீரை, காய்கறியை பசு மாட்டுக்கு கொடுத்தனர். அதேபோல், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவில் வளாக பின்புறம், இடைப்பாடி அருகே கல்வடங்கம் பகுதிகளில் பலர் தர்ப்பணம் கொடுத்தனர். மகா சிவராத்திரி குழு அமைப்பினர், ஆட்டையாம்பட்டி பொது மயானத்தில் உள்ள சமாதிகளை சுத்தப்படுத்தி, மோட்ச தீபம் ஏற்றி, உயிர் நீத்த அனைவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தனர். பலர் முன்னோர் நினைவாக பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X