சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பணம் திருடுபோனதாக புகார் கொடுத்தவரிடமே விசாரணை

Added : அக் 07, 2021
Share
Advertisement
இடைப்பாடி: இருப்பாளி, செவிடனூர் காட்டுவளவை சேர்ந்தவர் குமார், 40. இவரது மனைவி சரண்யா, 33. இவர்களுக்கு, 8 வயதில் மகள், 4 வயதில் மகன் உள்ளனர். தம்பதியர், கொத்தனார் வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, குமார் வேலைக்கு சென்றபோது, வீட்டில் உள்ள பீரோவில், 2 லட்சம் ரூபாயை வைத்துவிட்டு, அதன் சாவியை சரண்யாவிடம் கொடுத்துச்சென்றார். இரவு, சரண்யா, குழந்தைகள் தூங்கினர். நேற்று காலை, 11:00

இடைப்பாடி: இருப்பாளி, செவிடனூர் காட்டுவளவை சேர்ந்தவர் குமார், 40. இவரது மனைவி சரண்யா, 33. இவர்களுக்கு, 8 வயதில் மகள், 4 வயதில் மகன் உள்ளனர். தம்பதியர், கொத்தனார் வேலை செய்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, குமார் வேலைக்கு சென்றபோது, வீட்டில் உள்ள பீரோவில், 2 லட்சம் ரூபாயை வைத்துவிட்டு, அதன் சாவியை சரண்யாவிடம் கொடுத்துச்சென்றார். இரவு, சரண்யா, குழந்தைகள் தூங்கினர். நேற்று காலை, 11:00 மணிக்கு வேலை முடிந்து வந்த குமார், பீரோவை திறந்து பார்த்தபோது பணமில்லை. இதுகுறித்து, அவர், பூலாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். வீட்டின் கதவு, பீரோ கதவு உடைக்கப்படாத நிலையில், எப்படி திருட்டு போயிருக்கும் என, குமார், சரண்யாவிடமே, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X