சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபரை நிர்வாணப்படுத்தி பணம், சங்கிலி பறித்த திருநங்கையர்

Added : அக் 07, 2021
Share
Advertisement
சேலம்: வாலிபரை நிர்வாணப்படுத்தி, 50 ஆயிரம் ரூபாய், தங்க மோதிரத்தை பறித்த, மூன்று திருநங்கையர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.சேலம், குகை, புலிக்குத்தி தெருவை சேர்ந்தவர், 43 வயது ஆண். இவர், கடந்த, 3 இரவு, 11:00 மணிக்கு, அங்குள்ள குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது, வேகமாக ஓடி வந்த, மூன்று திருநங்கையர், அந்த வாலிபர் வீட்டில் புகுந்து கொண்டனர். அவர் கேட்க,

சேலம்: வாலிபரை நிர்வாணப்படுத்தி, 50 ஆயிரம் ரூபாய், தங்க மோதிரத்தை பறித்த, மூன்று திருநங்கையர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


சேலம், குகை, புலிக்குத்தி தெருவை சேர்ந்தவர், 43 வயது ஆண். இவர், கடந்த, 3 இரவு, 11:00 மணிக்கு, அங்குள்ள குழாயில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது, வேகமாக ஓடி வந்த, மூன்று திருநங்கையர், அந்த வாலிபர் வீட்டில் புகுந்து கொண்டனர். அவர் கேட்க, 'போலீஸ் துரத்துவதால், அவர்கள் சென்றதும், இங்கிருந்து போய் விடுகிறோம்' என கூறினர். வாலிபரும் அமைதியாக இருந்தார். சிறிது நேரத்தில், திருநங்கையர், தங்கள் ஆடைகளை கழற்றியதோடு, வாலிபரின் ஆடைகளையும் கழற்றி நிர்வாணப்படுத்தினர். அதை புகைப்படம், வீடியோ எடுத்த திருநங்கையர், வாலிபரை மிரட்டி, 50 ஆயிரத்து, 700 ரூபாய், 1.5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டனர். இதுகுறித்து, நேற்று முன்தினம் வாலிபர் அளித்த புகார்படி, செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X