சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சி: உறவினர் உள்பட 8 பேருக்கு காப்பு

Added : அக் 07, 2021
Share
Advertisement
ஆத்தூர்: வீட்டை காலி செய்யும்படி, அடியாட்களுடன் சென்று, பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சி செய்த புகாரில், உறவினர் பெண் உள்பட எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர். ஆத்தூர், பைத்தூர், நடுத்தெருவை சேர்ந்தவர் லதா, 50. இவரது கணவர் பழனியப்பனின் தங்கை மாதேஸ்வரி, 48. இவர்கள் இடையே, வீடு, நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. நேற்று, மாதேஸ்வரி, அவரது கணவர் ராஜேந்திரன், அடியாட்களுடன்

ஆத்தூர்: வீட்டை காலி செய்யும்படி, அடியாட்களுடன் சென்று, பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சி செய்த புகாரில், உறவினர் பெண் உள்பட எட்டு பேரை, போலீசார் கைது செய்தனர். ஆத்தூர், பைத்தூர், நடுத்தெருவை சேர்ந்தவர் லதா, 50. இவரது கணவர் பழனியப்பனின் தங்கை மாதேஸ்வரி, 48. இவர்கள் இடையே, வீடு, நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. நேற்று, மாதேஸ்வரி, அவரது கணவர் ராஜேந்திரன், அடியாட்களுடன் சென்று, லதாவை வீட்டை விட்டு காலி செய்ய கூறினர். அவர் மறுக்க, வீட்டில் இருந்த பொருட்களை ஆட்டோவில் ஏற்றினர். தடுக்க முயன்ற லதாவை தாக்கி, அவரது ஆடைகளை கிழித்து மானபங்கப்படுத்த முயன்றனர். அத்துடன், வீட்டில் இருந்த, 14 பவுன் நகைகள், 10 ஆயிரம் ரூபாயை எடுத்துச்சென்றதாக, லதா புகார்படி, ஆத்தூர் ஊரக போலீசார் விசாரித்தனர். பின், மாதேஸ்வரி, 48, ஆத்தூரை சேர்ந்த பார்த்திபன், 30, கார்த்திகேயன், 32, பழனிசாமி, 26, வினோத்குமார், 25, பாண்டியன், 23, ஆல்பர்ட், 25, விக்னேஷ், 23, மீது, பெண் வன்கொடுமை செய்தல், கொலை மிரட்டல் உள்பட ஏழு பிரிவுகளில் வழக்கு பதிந்து கைது செய்தனர். இவர்களிடம், மூன்று பைக், மினி சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து, ராஜேந்திரனை தேடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X