சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3 ஏ.டி.எம்., மையங்கள் உடைப்பு; முதியவரிடம் போலீசார் விசாரணை

Added : அக் 07, 2021
Share
Advertisement
ஓசூர்: தேன்கனிக்கோட்டையில் நேற்று அதிகாலையில் சுற்றித்திரிந்த, 60 வயது மதிக்கத்தக்க முதியவர், பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதன் அருகே இருந்த ஒன் இந்தியா, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மையங்களின் கண்ணாடி மற்றும் இயந்திரங்களை கட்டையால் அடித்து உடைத்தார். இதனால் அவசர கால அலாரம் ஒலித்தது. அங்கிருந்து சென்ற முதியவர், அருகேயிருந்த டி.வி., சர்வீஸ் செய்யும்

ஓசூர்: தேன்கனிக்கோட்டையில் நேற்று அதிகாலையில் சுற்றித்திரிந்த, 60 வயது மதிக்கத்தக்க முதியவர், பஸ் ஸ்டாண்ட் மற்றும் அதன் அருகே இருந்த ஒன் இந்தியா, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் வங்கி ஏ.டி.எம்., மையங்களின் கண்ணாடி மற்றும் இயந்திரங்களை கட்டையால் அடித்து உடைத்தார். இதனால் அவசர கால அலாரம் ஒலித்தது. அங்கிருந்து சென்ற முதியவர், அருகேயிருந்த டி.வி., சர்வீஸ் செய்யும் கடையின் வெளியே வைத்திருந்த பழைய, 'டிவி' பொருட்களை சூறையாடினார். அங்கு ரோந்து பணியிலிருந்த தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, முதியவரை பிடித்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தார். இதில் அவர், ஓசூர் தேர்ப்பேட்டையை சேர்ந்த கார்த்திகேயன் என்பதும், மனநலம் பாதித்தவர் என்பதும் தெரிந்தது. ஏ.டி.எம்., மையங்களில் பணம் ஏதும் திருட்டு போகாத நிலையில், மன அழுத்தத்தால் முதியவர் ஏ.டி.எம்., மையங்களை உடைத்தது தெரிந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X