சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காஸ் கசிவால் வீட்டில் தீ விபத்து: குழந்தைகள் உட்பட 7 பேர் காயம்

Added : அக் 07, 2021
Share
Advertisement
ஓசூர்: ஓசூரில், காஸ் சிலிண்டர் கசிவால் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உட்பட ஏழு பேர் படுகாயமடைந்தனர்.உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அரவிந்த், 33; இவரது தம்பி பீம்சிங், 28; இருவரும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம்நகர் பள்ளம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி, பானிபூரி தயார் செய்து விற்று வந்தனர். நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு

ஓசூர்: ஓசூரில், காஸ் சிலிண்டர் கசிவால் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த குழந்தைகள் உட்பட ஏழு பேர் படுகாயமடைந்தனர்.


உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அரவிந்த், 33; இவரது தம்பி பீம்சிங், 28; இருவரும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராம்நகர் பள்ளம் பகுதியில் குடும்பத்துடன் தங்கி, பானிபூரி தயார் செய்து விற்று வந்தனர். நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு அனைவரும் தூங்கச் சென்றனர். சிலிண்டரில் காஸ் கசிவு இருந்த நிலையில், அதையறியாமல் குடும்பத்தினர் தூங்கியுள்ளனர். நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, அரவிந்த்தின் தாய் சந்திராதேவி, 70, எழுந்து, மின் விளக்கை போட்டார். வீடு முழுவதும் காஸ் பரவியிருந்ததால் தீப்பிடித்து, வீட்டின் சிமென்ட் கூரை பெயர்ந்து, அருகிலுள்ள வீடுகள் மேல் விழுந்ததில், இரு வீடுகள் சேதமானது. இந்த தீ விபத்தில், அரவிந்த், 33, அவரது மனைவி ரூபி, 32, மகன் அபி?ஷேக், 10, மகள் ரோலி, 7, தாய் சந்திராதேவி, 70, தம்பி பீம்சிங், 28, அவரது மகன் ரித்திக், 8, ஆகிய ஏழு பேர், 40 முதல், 50 சதவீதம் தீக்காயம் அடைந்தனர். தீயை அணைத்து அவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓசூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X