பொது செய்தி

தமிழ்நாடு

புரட்டாசி பட்டத்தில் பயறு வகை பயிர்களை சாகுபடி செய்ய அறிவுரை

Added : அக் 07, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி வட்டாரத்தில் இந்த ஆண்டு, 810 மி.மீ., மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை தங்களது நிலத்தில் பயிர் ஏதும் சாகுபடி செய்யாமல் தரிசாக வைத்திருக்கும் விவசாயிகள், குறுகிய கால பயிர்களான காராமணி, உளுந்து மற்றும் கொள்ளு போன்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி வட்டாரத்தில் இந்த ஆண்டு, 810 மி.மீ., மழை பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை போதுமான அளவு பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை தங்களது நிலத்தில் பயிர் ஏதும் சாகுபடி செய்யாமல் தரிசாக வைத்திருக்கும் விவசாயிகள், குறுகிய கால பயிர்களான காராமணி, உளுந்து மற்றும் கொள்ளு போன்ற பயறு வகைகளை சாகுபடி செய்யலாம். கொள்ளு சாகுபடியை விட அதிக லாபம் தரக்கூடிய, அதே பயிர் வயதுடைய காராமணி, உளுந்து மற்றும் பச்சைப்பயறு ஆகிய பயறு வகை பயிர்கள் கூடுதல் லாபம் தரக்கூடியது. எனவே, விவசாயிகள் இந்த நடப்பு பருவ மழையை சரியான முறையில் பயன்படுத்தி கூடுதல் மகசூல், லாபம் பெற வேண்டும். கிருஷ்ணகிரி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தில் தரமான சிளி, 7 ரக காராமணி, பையூர்-2 கொள்ளு விதைகள், 50 சதவீத மானிய விலையில் கிடைக்கும். எனவே, வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி தரமான விதைகள் வாங்கி விதைப்பதன் மூலம் சீரான வளர்ச்சி, ஒரே சமயத்தில் முதிர்ச்சி மற்றும் அறுவடைக்கு எளிதாக இருக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X