பொது செய்தி

தமிழ்நாடு

காங்., கட்சியினர் சாலை மறியல்

Added : அக் 07, 2021
Share
Advertisement
ஓசூர்: உத்தரபிரதேச மாநில சம்பவத்தை கண்டித்தும், காங்., தலைவர் பிரியங்கா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேன்கனிக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, காங்., கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தளி சட்டசபை தொகுதி பொறுப்பாளர் அப்துல்ரஹ்மான் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன், மாநில செயலாளர் அன்வர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், உத்தரபிரதேச மாநில அரசு

ஓசூர்: உத்தரபிரதேச மாநில சம்பவத்தை கண்டித்தும், காங்., தலைவர் பிரியங்கா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேன்கனிக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, காங்., கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தளி சட்டசபை தொகுதி பொறுப்பாளர் அப்துல்ரஹ்மான் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன், மாநில செயலாளர் அன்வர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், உத்தரபிரதேச மாநில அரசு மற்றும் மத்திய அரசை கண்டித்து, கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, அஞ்செட்டி சாலையில் அமர்ந்து, காங்., கட்சியினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால், 35க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X